பொது செய்தி

இந்தியா

3ம் வகுப்பு சிறுவனின் காதல் கடிதம்: கட்டிவைத்து தண்டனை

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (40)
Share
Advertisement
அனந்த்பூர்: ஆந்திராவில் காதல் கடிதம் எழுதியதற்காகவும், பொருட்களை திருடியதற்காகவும் பள்ளி சிறுவர்களை கட்டிவைத்து தண்டித்ததற்காக பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் எழுந்துள்ளது.ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் உள்ள பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களின் கை, கால்களை மேஜையில் கட்டி வைத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இதனையடுத்து, சிறுவர்களை
Andhra, Students, LoveLetter, Tie, ஆந்திரா, பள்ளி, மாணவர்கள்

அனந்த்பூர்: ஆந்திராவில் காதல் கடிதம் எழுதியதற்காகவும், பொருட்களை திருடியதற்காகவும் பள்ளி சிறுவர்களை கட்டிவைத்து தண்டித்ததற்காக பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் எழுந்துள்ளது.

ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் உள்ள பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களின் கை, கால்களை மேஜையில் கட்டி வைத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இதனையடுத்து, சிறுவர்களை கொடுமைப்படுத்தியதாக பள்ளி நிர்வாகம் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யும்படி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


latest tamil news


இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கூறும்போது, ஒரு மாணவன் காதல் கடிதம் எழுதியதற்காகவும் மற்றொரு மாணவன் பிறரின் பொருட்களை திருடியதற்காகவும் தண்டிக்கப்பட்டதாக கூறினார். அதுவும், மாணவர்களின் பெற்றோர் தான் இவ்வாறு கட்டிவைத்ததாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு சமூக ஆர்வலர்களில் ஒருவரான அச்யுத்தா ராவ் கூறுகையில், தலைமை ஆசிரியை சொல்வது போல் பெற்றோர் தண்டித்தாக எடுத்துக்கொண்டாலும், பள்ளிக்குள் வந்து அவர்கள் இவ்வாறு தண்டிக்க நிர்வாகம் எப்படி அனுமதி கொடுத்தது? மாணவர்களை தண்டித்த பள்ளி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
02-டிச-201908:50:43 IST Report Abuse
spr காதல் கடிதம் எழுதியவனைக் கூட மன்னித்துவிடலாம் அவன் பிற்காலத்தில், ஒரு கவிஞர் என்று சொல்லிப் பிழைக்க முடியும் அவனது கற்பனைத்திறன் பாராட்டப்படலாம் பெரிய குற்றமல்ல ஆனால் திருடியவனை மன்னிக்க முடியாது அவனது பெற்றோர்கள் தண்டித்திருந்தால், அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் ஆனால், "மாணவர்களின் கை, கால்களை மேஜையில் கட்டி வைத்திருப்பது " அவ்வளவு பெரிய கொடுமையா " தலைமை ஆசிரியை சொல்வது போல் பெற்றோர் தண்டித்தாக எடுத்துக்கொண்டாலும், பள்ளிக்குள் வந்து அவர்கள் இவ்வாறு தண்டிக்க நிர்வாகம் எப்படி அனுமதி கொடுத்தது? மாணவர்களை தண்டித்த பள்ளி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும், என்ற சமூக ஆர்வலர்களில் ஒருவரான அச்யுத்தா ராவ் அவர்களையே முதலில் போட்டுத் தள்ள வேண்டும்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-டிச-201923:56:02 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மேல்ஜாதி பையனா இருந்தா கிருஷ்ணடு ன்னு சொல்லி கும்பிட்டிருப்பாங்க. வெண்ணையை திருடி, கோபிகாஸ்திரீகளுடன் கும்மாளம் போட்டத்துக்கு வெச்சி சவட்டியிருக்குணும்ன்னு சொல்வாளா?
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
30-நவ-201921:27:13 IST Report Abuse
Krishnamurthy Venkatesan சினிமா, டிவி, மொபைல். இவைதான் காரணம். மேலும் மூன்றாம் வகுப்பு மாணவனும், ஐந்தாம் வகுப்பு மாணவனும் தப்பில்லாமல் எழுதியிருந்தால் பாராட்டலாம். இந்த வயது சிறுவர்களுக்கு காதல், காமம் போன்றவை பற்றி தெரியாத அப்பாவி வயசு. இவர்கள் செய்த காரியத்தில் உள்ள தவறை எடுத்து சொல்லி மன்னித்து விட்டுவிட்டால் இரு கெட்டவர்கள் உருவாக வாய்ப்பில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X