உள்ளாட்சி தேர்தல்: திமுக முறையீடு

Added : நவ 29, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி: உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் நேற்று(நவ.,28) தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில் கூறப்பட்டதாவது:
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்னர், தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்த பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது.
ஏற்கனவே தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையி்ல், தேர்தல் நடத்தக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனையடுத்து, அது குறித்து தலைமை நீதிபதியை அணுகும்படி திமுக தரப்பிற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக, புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து 6 பேர் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். புதிய மாவட்டங்களில், தொகுதி வரையறை செய்யாமல், தேர்தலை நடத்தினால், நாங்கள் பாதிக்கப்படுவோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
30-நவ-201911:57:04 IST Report Abuse
karutthu உள்ளாட்சி தேர்தலுக்கு வாயிதா கேட்கிறதா தி மு க ?
Rate this:
Share this comment
Cancel
nanbaenda - chennai,இந்தியா
29-நவ-201921:18:53 IST Report Abuse
nanbaenda மக்களை சிரமத்துக்கு உள்ளாக்குவதே தி மு க வின் வேலையாக உள்ளது. இன்னும் எத்தனை நாள் இழுத்தடிப்பீர்கள். உங்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
29-நவ-201920:22:55 IST Report Abuse
HSR திமுக முறைகேடுன்னுதானே எல்லோரும் படிச்சீங்க,..ஹஹஹஹஹ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X