சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரங்களில் கடலூர், நாகை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
டிச., 1, 2ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காட்டுமன்னார் கோவில், கீழணை பகுதிகளில் தலா 12 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது. சூறாவளி காற்று வாய்ப்பிருப்பதால் தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் இரு நாட்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் கூறினார்.