அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலை சந்திக்க தயார்: ஸ்டாலின்

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: சென்னையில் நிருபர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: மூன்றாண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாத அதிமுக அரசு, ஏதாவது சில காரணங்களை சொல்லி வருகிறது. நீதிமன்றத்திற்கு சென்று யாராவது தடைபெறுவார்களா? தடை பெற்றால், தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுகிறது. தேர்தலை நிறுத்துவதற்கான சதி திட்டத்தை
DMK,MKStalin,Stalin,திமுக,ஸ்டாலின்

சென்னை: சென்னையில் நிருபர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: மூன்றாண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாத அதிமுக அரசு, ஏதாவது சில காரணங்களை சொல்லி வருகிறது. நீதிமன்றத்திற்கு சென்று யாராவது தடைபெறுவார்களா? தடை பெற்றால், தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுகிறது.

தேர்தலை நிறுத்துவதற்கான சதி திட்டத்தை நீட்டியும், அதற்கான வழிவகைகளை செய்துவிட்ட பின்னர், திமுக தான் நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது. நிறுத்த முயற்சி செய்கிறது என முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை திமுக மீது தவறான , பொய்யான குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர்.

அவர்கள் அரசியல் காரணங்களுக்காக சொல்கின்றனர். மீடியாக்களும், விவாதம் முதல் செய்திகள் வரை திமுக தான் தடை உத்தரவை பெற முயற்சி செய்கிறது எனக்கூறுவது வேதனையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்தனர். பின்னர், மறைமுக தேர்தல் நடக்கும் என அறிவித்தனர். தொடர்ந்து, பல குழப்பங்களை செய்து, இதன் மூலம் யாராவது நீதிமன்றத்திற்கு சென்று பிரச்னை எடுத்து செல்லும் போது, தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டு தள்ளி வைக்கலாம் என அரசு செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்தினாலும், அதனை சந்திக்க திமுக தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




ஸ்டாலின் கவலை


முன்னதாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாநகராட்சியில் 549 துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு இன்ஜினியர்களும், பட்டதாரிகளும் விண்ணப்பித்தார்கள் என்ற செய்தி, அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் எந்த அளவிற்கு கோர ரூபம் எடுத்து தாண்டவமாடுகிறது என்பதை எடுத்து காட்டுகிறது. புதிய தொழில்கள், வேலைவாய்ப்புகள் எதையும் உருவாக்காமல், உருவாக்குவது குறித்து சிந்திக்காமல் அதை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல், இளைஞர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தி வரும் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை, தமிழகத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது.ஐ.டி., நிறுவனங்கள் எல்லாம் ஏற்கனவே ஏதாவது ஒரு செயற்கை காரணத்தை சுட்டி காட்டி ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.
ஐடி ஊழியர்கள் குறித்து மத்திய மாநில அரசுகள் கவலைப்படாதது கண்டனத்திற்குரியது. வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சகட்டம்தான் பொறியாளர்களும், பட்டதாரிகளும் துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது மிகப் பரிதாபமான கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறது. இளைஞர்களின் வாழ்வுடன் மத்திய மாநில அரசுகள் ஈவு இரக்கமற்ற விளையாட்டை நடத்துவது ஆபத்தானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
30-நவ-201902:25:14 IST Report Abuse
Cheran Perumal மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற நினைப்புதான் இப்படி பேச வைக்கிறது.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
29-நவ-201920:20:13 IST Report Abuse
sridhar அனைவரும் திமுக கூட்டணிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்ற சட்ட திருத்தம் வந்தவுடன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார்.
Rate this:
Cancel
29-நவ-201919:31:39 IST Report Abuse
நக்கல் தெருவெல்லாம் மழை பேஞ்சு தண்ணியா இருக்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X