37வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

37வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயம்

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
செங்கல்பட்டு, மாவட்டம், உதயம், காஞ்சிபுரம்

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் இன்று (நவ.,29) உதயமானது. வேண்பாக்கம் கிராமத்தில் நடந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக பணிகளை முதல்வர் பழனிசாமி துவங்கி வைத்தார். விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், வண்டலூர் (புதிது), திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்கள் செயல்பட உள்ளன. மேலும், மதுராந்தகம், தாம்பரம், செங்கல்பட்டு என 3 வருவாய் கோட்டங்களும் உள்ளன. இந்த மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, பல்லாவரம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் என 6 சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மக்களவை தொகுதிகளில் பாதியும் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் வருகின்றன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X