பொது செய்தி

இந்தியா

இலங்கை தமிழருக்கு சம உரிமை: மோடி நம்பிக்கை

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு சம உரிமை, மரியாதை, சமூக நீதி வழங்க முந்தைய அரசு செய்த பணிகளை, கோத்தபய அரசும் செய்யும் என நம்புகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை
இந்தியா, இலங்கை, கோத்தபய, பிரதமர் மோடி, தமிழர்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு சம உரிமை, மரியாதை, சமூக நீதி வழங்க முந்தைய அரசு செய்த பணிகளை, கோத்தபய அரசும் செய்யும் என நம்புகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.


அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: வலிமையான இலங்கை அமைய வேண்டும் என்பதற்காக மக்கள் கோத்தபயவை தேர்வு செய்தனர். வலிமையான இலங்கை என்பது இந்தியாவின் நலன்களுக்கு மட்டும் அல்லாமல், இந்திய கடல் பகுதிக்கும் முக்கியம்.
இந்தியா இலங்கை இடையே வலிமையான உறவு உள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில், இலங்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் கண்டனம் தெரிவிப்பதுடன், போரிட்டும் வருகிறது.
இலங்கைக்கு, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக 50 மில்லியன் டாலரும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 400 மில்லியன் டாலரும், சோலார் திட்டங்களுக்காக 100 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா செய்யும். இலங்கையில், இந்தியா சார்பில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. அங்கு வாழும் தமிழ் மக்களுக்காக கூடுதலாக 14 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்படும்.
இலங்கை மறுசீரமைப்பு குறித்து, இலங்கை அதிபர் தனது கருத்தை என்னிடம் தெரிவித்தார். இலங்கையை மறுசீரமைப்பது என்ற அடிப்படையில், முந்தைய அரசு மேற்கொண்ட, தமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி, அமைதி போன்ற நடவடிக்கைகளை கோத்தபயா மேற்கொள்வார் என நம்புகிறேன். 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலமும் இலங்கையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் . இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின் கோத்தபய கூறுகையில், இலங்கை பிடித்து வைத்துள்ள இந்திய படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி இலங்கை வர வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
29-நவ-201921:15:13 IST Report Abuse
anbu ஐ நாவில் போர்குற்ற விசாரணையின் போது தனக்கு சாதகமாக இந்தியாவை பயன்படுத்தும் நோக்கிலேயே இலங்கை செயல்படும். பின்னதாக சீனாவுடன் பாகிஸ்தானுடன் கை கோர்த்து இந்தியாவுக்கு எதிராக இயங்கும்
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
29-நவ-201920:41:37 IST Report Abuse
anbu ராஜ பக்சே குடும்பம் இந்தியாவிடம் பம்முவது ஐநாவில் போர்குற்ற விசாரணைகளில் தமக்கு ஆதரவாக நடந்து கொள்ளவே. ஆனால் இந்தியா இதை ஆயுதமாக பயன் படுத்தி தமிழர் நலனையும் ,இந்திய ஆதிக்கத்தையும் மேம்படுத்த வேண்டும். ஆனால் டுமீளர்கள் எதுக்கெடுத்தாலும் கருப்பு பலூன் விடுவதிலும் go back போடுவதிலும் குறியாக உள்ளனர். கோத்தா பாயா இந்தியா வருவதன் முன் ஓரணியில் மோடியை அல்லது வெளியுறவு துறையுடன் இணைந்து சமயோசிதமாக சாதக பாதகங்களை ஆராய்ந்து பேசாமல் எதிர்ப்பு வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்துள்ளனர். இலங்கை அரசாங்கம் எப்போதும் இந்தியாவை பயன்படுத்தி தனது நலனை சாதித்த பின் இந்தியாவுக்கு பின்புறத்தை காட்டிக்கொண்டு சீனாவுடன் கை கோர்த்து கொண்டு இந்தியாவை ஏமாற்றி வந்ததுதான் வரலாறு. இப்போதும் கூட இது தான் நடக்கும். ஆகவே இராவண சகோதரர்கள் இந்தியா வருமுன் டுமீளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதலமைச்சர் தலைமையில் டெல்லி சென்று தந்திர உபாயங்களை ஆராய்ந்து அணுகி இருக்க வேண்டும். ஆனால் தமிழர் நலனைவிட டுமீளர் ஈகோ தான் இவர்களுக்கு பெரிது. மத்திய மாநில அரசுகளை வசை பாடுவதையும் எதிற்பதையும் வெற்று அறிக்கைகளையும் வீர வசனங்களையும் வெளிவிடுவதிலேயும் காலம் கழிப்பதால் ஒன்றும் ஆகாது. ஆகின்ற நல்ல பலன்கள் கூட கெட்டுவிட இவர்கள் போக்கு காரணமாகி விடும். எனவே உள்ளதையும் கெடுக்காமல் மத்திய அரசுடன் சுமுகமாக இணைந்து செயல்பட்டால் நல்ல பயன் கிட்டும். ஆனால் அந்த அறுவடை பயனை யாராவது அடைந்து விடுவார்களோ என்ற அச்சம் இவர்களிடையே உள்ளது. அதுதான் தடைக்கல். எதுவானாலும் பயன் ஈழ தமிழருக்கும் பெருமை அனைத்து தமிழருக்கும் என்று நினைத்தால் அங்கே தடைகள் இருக்காது. இப்போது ஈகோ பார்த்து இயங்கும் அரசியல் கட்சிகள் நாளைக்கே அரசியல் இலாபம் கருதி கூட்டணி வைப்பார்கள். அப்போது மட்டும் அந்த ஈகோ எப்படி காணாமல் போகிறது?
Rate this:
Cancel
Rajan - Chennai,இந்தியா
29-நவ-201919:22:55 IST Report Abuse
Rajan யோவ் சூசை பொலப்புல ஏன் மண் அள்ளி போடறீங்க? நீங்க எல்லாம் சரி பண்ணாலும், சூசை மூர்க்கன்ஸ் மூலமா வெடிக்க வெச்சி குளிர் காய்வாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X