இந்த செய்தியை கேட்க
ஸ்ரீகாகுளம்: அரசு விழாக்களுக்கு அழைக்காவிட்டால், உங்களை அடிப்பேன் என அரசு அதிகாரிகளை ஆந்திர சபாநாயகர் தமினேனி சீதாராம் மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா புலேவின் 129 வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாட்டை ஆந்திர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத்துறை செய்திருந்தது. சபாநாயகர் சீதாராம், எம்எல்ஏ.,வாக இருக்கும் அமுதலவல்சா தொகுதியில் நிகழ்ச்சி நடந்தது. எம்எல்ஏ., என்ற அடிப்படையில் தனக்கு அழைப்பு வரும் என சீதாராம் எதிர்பார்த்தார்.

முதல்வர் அலுவலகத்தில் இருந்து மட்டுமே அவருக்கு அழைப்பு கிடைத்தது. விழாவிற்கு வந்த மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல், நிகழ்ச்சியை யார் ஏற்பாடு செய்தது என சபாநாயகர் கேள்வி எழுப்பினார். இதற்கு அதிகாரிகள் பதிலளிக்க முயற்சிக்கும் போது, அதனை கண்டுகொள்ளாத சீதாராம், மீண்டும் இது போன்று நடந்தால், உங்களை அடிப்பேன் என அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார்.