உலகமெங்கும் ஆண்டுக்கு, 23 கோடி அறுவை சிகிச்சைக்கள் நடக்கின்றன.
உடலுக்குள் உறுப்புகள் மீது கத்தியால் வெட்டுப் போட்டு நடக்கும் இந்த சிகிச்சைகளின் முடிவில், தையல் போடவேண்டியுள்ளது.தையல் போடும்போது கணிசமான நோயாளிகளுக்கு தொற்றுகள் ஏற்பட்டு சிகிச்சையில் சிக்கலை உண்டாகின்றன. இதை தவிர்க்க, உடலுக்குள் வெட்டுக்களை மூடி, திசுக்களை இணைக்கும் புதிய ஒட்டுப் பிளாஸ்திரியை, அமெரிக்காவின், எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.மழைக்காலத்தில் சிலந்திகள், இரைகளைப் பிடிக்க பயன்படுத்தும் ஒருவகை வேதிப் பொருளை காப்பியடித்து, புதிய பிளாஸ்திரிக்கு தேவையான பிசினை உருவாக்கியதாக எம்.ஐ.டி., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நுரையீரல், குடல் போன்ற ரத்த ஈரம் உள்ள பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்த பின், இந்த புதிய பிளாஸ்திரியை போட்டு ஒட்டினால், காயம் ஆறும்வரை அது பாதுகாப்பாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.