சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மழைக்காடுகளை ஆராய ரூ.71.4 கோடி!

Added : நவ 29, 2019
Advertisement
மழைக்காடுகளை ஆராய ரூ.71.4 கோடி!


பூமியின் பரப்பளவில், 14 சதவீதமாக இருந்த மழைக்காடுகள், இப்போது வெறும், 6 சதவீதமாக குறைந்துள்ளன. எண்ணற்ற விலங்குகள், தாவரங்கள் செறிந்த அந்த இயற்கைப் பகுதி, பூமியின் சுற்றுச்சூழல் சமநிலைக்கு மிகவும் முக்கியம்.

இத்தனைக்கும் உலகெங்கும் பரவியிருந்த மழைக்காடுகளில் என்னென்ன காட்டுயிர்கள் இருக்கின்றன என்பது நமக்கு தெரிவதில்லை. இதனால், மழைக்காடுகளின் பல்லுயிர்த் தன்மையை விரிவாக அறிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களுக்கு, 71.4 கோடி ரூபாய் (10 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பரிசை அறிவித்துள்ளது, 'எக்ஸ் பிரைஸ்' அமைப்பு. ஏற்கனவே பல சுற்றுச்சூழல் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை இந்த அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மழைக்காடுகளில் இன்னும் கண்டறியப்படாதவிலங்குகள், தாவரங்களை விரைவாக கண்டறிய உதவும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் அணிகளில், அப்பகுதியில் வாழும் நபர்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பது கூடுதல் நிபந்தனை.ஏனெனில், உலக மழைக்காடுகளில் வசிக்கும் ஐந்து கோடி பேருக்கு, உறுதியாக அப்பகுதியைப் பற்றி நன்கு தெரிந்திருக்கும் என்பது தான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X