சூரிய ஒளியிலுள்ள போட்டான்களைக் கொண்டு நேரடியாக மின்சாரம் தயாரிப்பதுபோல, அதன் வெப்பத்தையும் நேரடியாக பயன்படுத்தி ஆற்றலை உண்டாக்கலாம்.
ஆனால், அந்த வெப்பத்தின் அளவு, பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் அளவுக்கு இருப்பதில்லை.அமெரிக்காவிலுள்ள ஹீலியோஜென் என்ற மாற்று எரிசக்தி நிறுவனம்,சூரிய கதிர்களை குவிக்கும் கண்ணாடிகளைக் கொண்டு, 1,000 டிகிரி சென்டிகிரேடுக்கும் மேல் வெப்பத்தை உண்டாக்க முடியும் என்று காட்டியுள்ளது.இத்தகைய வெப்ப ஆற்றல் இலவசமாக கிடைத்தால், பெட்ரோலியவேதிப் பொருட்கள், சிமென்ட், இரும்பு உள்ளிட்ட பல உலோகங்க பொருட்களை தயாரிக்கும் ஆலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இத்தகைய ஆலைகளில் தேவைப்படும் ஏராளமான, வெப்ப ஆற்றல்கள் நிலக்கரி, இயற்கை எரிவாயு மற்றும் இதர பெட்ரோலிய பொருட்கள் மூலம்தான் தற்போது கிடைத்து வருகின்றன. சூரிய ஒளி தாராளமாகக் கிடைக்கும் நாடுகளில் ஹீலியோஜென்னின் சூரிய ஒளிக் குவிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத தொழிற்சாலைகளை நிறுவ முடியும்.