சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

விண்ணை மறைக்கும் செயற்கைக் கோள்கள்

Added : நவ 29, 2019 | கருத்துகள் (4)
Advertisement
விண்ணை மறைக்கும் செயற்கைக் கோள்கள்

உலகின் எல்லா பகுதிக்கும் இணைய வசதியை கொண்டுவர எலான் மஸ்கிற்கு சொந்தமான 'ஸ்பேஸ் எக்ஸ்' திட்டமிட்டுள்ளது. இதற்கென 'ஸ்டார்லிங்க்' என்ற செயற்கைக் கோள்கள் கொண்ட அமைப்பை அது விண்வெளியில் நிறுவி வருகிறது.

அண்மையில் ஸ்பேஸ் எக்ஸ், 60 சிறு கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இது தவிர ஏற்கனவே, 60 சிறிய கோள்களை ஸ்டார்லிங்குக்காக ஏவியிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ். எல்லாம் சரிதான், ஆப்ரிக்கா முதல் அன்டார்டிகா வரை உலகின் மூலை முடுக்குகளில் இணைய வசதியை ஏற்படுத்தினாலும், ஸ்பேஸ் எக்ஸ், விண்வெளி ஆய்வாளர்களுக்கு புதிய தலைவலியை உருவாக்கியிருப்பதாக 'நேச்சர்' இதழ் தெரிவித்து உள்ளது.


என்ன சிக்கல்?

செயற்கைக் கோள்களில் உள்ள சூரிய மின் பலகைகள் ஒளியை பிரதிபலிக்கக்கூடியவை. இந்த ஒளி, தரையில் இருக்கும் சக்திவாய்ந்த விண்ணோக்கிகளுக்கு இடையூறாக இருக்கும். மேலும், ஏராளமான செயற்கைக் கோள்கள் மின் பலகைகளை விரித்தபடி விண்ணில் நிற்பது, பல விண்ணியல் நிகழ்வுகளை தொலைநோக்கி வழியே பார்ப்பதற்கு குறுக்கே வரும் ஆபத்தும் உள்ளது. மேலும், ஏராளமான மின்காந்த அலைவரிசைகளை பயன்படுத்தும் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களால், ரேடியோ தொலைநோக்கிகளுக்கு கிடைக்கும் சமிக்ஞைகள் பிசிறு தட்டவும் வாய்ப்பு உள்ளது.இந்த கவலைகளைப் போக்க 'ஸ்பேஸ் எக்ஸ்' என்ன செய்யப்போகிறது என்று தகவலில்லை.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mukundan - chennai,இந்தியா
03-டிச-201916:37:32 IST Report Abuse
mukundan அணைத்து டிவி தொடர்பான விஷயங்களை, இன்டர்நெட் கேபிள் மூலம் பயன்படுத்த வேண்டும். டிவி சானல்கள் satelite ஐ உபயோக படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-டிச-201903:41:39 IST Report Abuse
J.V. Iyer டிவிக்களை ஒழித்தால், இந்த பிரச்சினை நீங்கும். மக்களும் நல்வழிப்படுவார்கள். எல்லாவற்றிற்கும் காரணம் டிவி.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
01-டிச-201905:11:12 IST Report Abuse
 nicolethomson இப்படிக்கா போனா அங்க மான் வயித்துல ஏழு கிலோ பிளாஸ்டிக் , அப்படிக்கா போனா திமிங்கலம் வயித்துல 25 கிலோ பிளாஸ்டிக் , அந்த தண்ணிய குடிச்ச அதுலயும் பிளாஸ்டிக் , இப்போ விண்வெளியில் இன்றைய சாட்டிலைட் நாளைய குப்பை என்று விளையாடுறாங்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X