விண்ணை மறைக்கும் செயற்கைக் கோள்கள்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

விண்ணை மறைக்கும் செயற்கைக் கோள்கள்

Added : நவ 29, 2019 | கருத்துகள் (4)
விண்ணை மறைக்கும் செயற்கைக் கோள்கள்

உலகின் எல்லா பகுதிக்கும் இணைய வசதியை கொண்டுவர எலான் மஸ்கிற்கு சொந்தமான 'ஸ்பேஸ் எக்ஸ்' திட்டமிட்டுள்ளது. இதற்கென 'ஸ்டார்லிங்க்' என்ற செயற்கைக் கோள்கள் கொண்ட அமைப்பை அது விண்வெளியில் நிறுவி வருகிறது.

அண்மையில் ஸ்பேஸ் எக்ஸ், 60 சிறு கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இது தவிர ஏற்கனவே, 60 சிறிய கோள்களை ஸ்டார்லிங்குக்காக ஏவியிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ். எல்லாம் சரிதான், ஆப்ரிக்கா முதல் அன்டார்டிகா வரை உலகின் மூலை முடுக்குகளில் இணைய வசதியை ஏற்படுத்தினாலும், ஸ்பேஸ் எக்ஸ், விண்வெளி ஆய்வாளர்களுக்கு புதிய தலைவலியை உருவாக்கியிருப்பதாக 'நேச்சர்' இதழ் தெரிவித்து உள்ளது.


என்ன சிக்கல்?

செயற்கைக் கோள்களில் உள்ள சூரிய மின் பலகைகள் ஒளியை பிரதிபலிக்கக்கூடியவை. இந்த ஒளி, தரையில் இருக்கும் சக்திவாய்ந்த விண்ணோக்கிகளுக்கு இடையூறாக இருக்கும். மேலும், ஏராளமான செயற்கைக் கோள்கள் மின் பலகைகளை விரித்தபடி விண்ணில் நிற்பது, பல விண்ணியல் நிகழ்வுகளை தொலைநோக்கி வழியே பார்ப்பதற்கு குறுக்கே வரும் ஆபத்தும் உள்ளது. மேலும், ஏராளமான மின்காந்த அலைவரிசைகளை பயன்படுத்தும் தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களால், ரேடியோ தொலைநோக்கிகளுக்கு கிடைக்கும் சமிக்ஞைகள் பிசிறு தட்டவும் வாய்ப்பு உள்ளது.இந்த கவலைகளைப் போக்க 'ஸ்பேஸ் எக்ஸ்' என்ன செய்யப்போகிறது என்று தகவலில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X