இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 ஆண்டுகளில் இல்லாத கடும் வீழ்ச்சி.2-வது காலாண்டிற்கான ஜிடிபி 4.5 சதவீதமாக குறைந்தது.

* கடந்த காலாண்டிற்கான ஜிடிபி ஏற்கனவே 5சதவீம் என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
* கடந்த ஆண்டு இதே 2-வது காலாண்டில் ஜிடிபி 6.9% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
* கடைசியாக 2012-13 ஜனவரி மார்ச் காலாண்டில் 4.3% ஆக ஜிடிபி இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
* 8 முக்கிய ஆதார தொழிற்துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதமாக குறைந்தது.முக்கியமாக எரிபொருள் மற்றும் சக்தி துறையில்தான் சரிவு அதிகமாக ஏற்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதம் 17.6% குறைந்துள்ளது.
அதேபோல் கச்சா எண்ணெய் துறையில் 5.1% வளர்ச்சி குறைந்துள்ளது. இயற்கை எரிவாயு துறையில் 5.7% வளர்ச்சி குறைந்துள்ளது. இது போல சிமெண்ட் உற்பத்தில் 7.7% குறைந்துள்ளது. ஸ்டீல் உற்பத்தில் 1.6% குறைந்துள்ளது.
* மத்திய அரசின் தொடர் முயற்சியால், 4வது மற்றும் 5வது காலாண்டில் பொருளாதார நிலைமை சீராகலாம்.
* கடந்த 2நாட்களுக்கு முன் லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்;
இந்தியாவின் உண்மையான ஜிடிபி 2009-2014ல் 6.4% ஆக இருந்தது. 2014-2019 ல் ஜிடிபி மதிப்பு 7.5% ஆக உள்ளது. இதனால் ஜிடிபி குறித்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். வேலைவாய்ப்பு போதுமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது, என குறிப்பிட்டு பேசினார். இந்நிலையில் சரிவு அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் விமர்சனம்
6 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஜிடிபி மிக மோசமாக சரிந்துள்ளதன் மூலம் மத்திய பாஜக அரசு மோசமான சாதனையை செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
ஜிடிபி சரிவு காரணமாக, மத்திய அரசை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமாக படுகுழிக்கு தள்ளிவிட்டது. இந்தியா மிக மோசமான இருண்ட காலத்துக்கு சென்றுவிட்டது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளது.