கவலைக்குரிய பொருளாதாரம்: மன்மோகன்சிங்

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (100)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்து உள்ளார்.latest tamil newsஇது குறித்து அவர் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமையை விட சமூகத்தின் நிலை இன்னும் கவலைக்குரியதாக உள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள நாட்டின் மொத்த உள்நாட்டு உறபத்தி புள்ளிவிவரங்கள்4.5 ஆக உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதமாக வளர வேண்டும். பொருளாதார கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவாது.


latest tamil news
பொருளாதார நிலை என்பது அதன் சமூக நிலையின் பிரதிபலிப்பாகும். தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது கவலைக்குரியதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
01-டிச-201907:51:44 IST Report Abuse
spr "வேலை இல்லாதவர்கள் அதிகரித்து விட்டார்கள். வேலை இல்லாமல் நகரங்களில் பல இடங்களில் வீட்டின் முன் சிறிய டேபிள் போட்டு உணவு வகைகளை விற்க ஆரம்பித்தது அதிகரித்து விட்டது.- அதில் நல்ல ஆதாயமுள்ளது என்பதனை அறிந்தவர்கள் அதற்கு கையில் காசு அதிகம் புழங்கும் மக்களிடம் ஆதரவு உள்ளது என அறிந்தவர்கள் முயற்சிக்கிறார்கள் இன்று மிக அடிப்படை உணவே ரூ 120 /- என்று சொன்னாலும் வாங்க ஆட்கள் இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை யாரேனும் முகம் சுளிக்கிறார்களா? உபேர், zomatto போன்ற கம்பனிகளில் படித்த இளஞ்சர்கள் வேறு வழியில்லாமல் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். - நண்பர் மகன் பிகாம் படித்தவர் சுமாரான மதிப்பெண்கள்தான் எடுத்திருக்கிறார் ஆனால் அவருக்கு நிறுவனங்களில் வேலை செய்ய மனமில்லை (அவரை அவர்கள் எடுக்க விரும்பவில்லை என்பது வேறு செய்தி) அவர் தனது தந்தையை வருத்தி ஒரு இருசக்கர வாகனம் வாங்க வைத்து இன்று ஏதோ உணவு விடுதிக்கு டெலிவரி ஆளாக பணியாற்றுகிறார் அவர் சொல்வது "சுதந்திரமான வேலை ஊரைச் சுற்றலாம் பல அழகிய மனிதர்களை சந்திக்கலாம் என்கிறார் விவசாயம் அழிந்து விட்டது. - அரசுகளின் வேலை செய்யாமலே கிதாய்க்கும் இலவச வருமான திட்டத்தால், விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை நில விற்பனை நல்ல ஆதாயம் தருவதாலும் அடுத்த தலைமுறை விவசாயம் செய்ய விரும்பவில்லை என்பதாலும் பலர் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டதாக நேற்று திருவாரூரிலிருந்து வந்த விவசாயக் குடும்ப அன்பார் சொன்னார். சிறு தொழில்கள் படுத்து விட்டன. இதற்கு முக்கிய காரணம் அதில் முதலீடு செய்யப்பட்ட, அல்லது கடனாகத் தரப்பட்ட புழக்கத்தில் இருந்த கறுப்புப் பணம் காணாமற் போனதுவே மேலும் மாசுக்கட்டுப்பாடு மக்களின் போராட்டம் இவற்றால் மூடப்பட்ட தொழிற்சாலைகள் பலன் வேலையில்லாத திண்டாட்டம் பெரிய கம்பனிகள் நஷ்டத்தில் ஓடுகின்றன..- நிர்வாகத்திறன் இல்லாத இளைய தலைமுறை தரம் குறித்த கவனமில்லாத நிலையில் சந்தையில், போட்டியிட இயலாத நிர்வாகம் .மேல்நிலை அதிககாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தின் அதீதமான வருமானம் .கோரிக்கைகள் இவற்றால் அழிந்து போகின்றன. உற்பத்தி செய்யும் தொழிலாளிக்கு கூட கொஞ்சம் வருமானம் தந்தால் அதில் தவறில்லை ஆனால் முடிவெடுப்பதாகக் கூறிக்கொண்டு வேலை தெரியாமல் ஏதோ ஒரு காரணத்தால் அதிகாரியாக இருப்பவருக்கு லட்சத்தில் வாரி வழங்கும் நிர்வாகம் ஏற்பாடு உருப்படும் ஆற்று நீரை நீ குடி நீ நான் குடி என்பதுதான் இன்றைய நிலை இவற்றையெல்லாம் அறியாமல் பொத்தாம் பொதுவாக நாட்டில் பொருளாதார மந்த நிலை நாடு அழிந்து போயிற்று என்று சொல்வது சரியல்ல இன்னமும் விவாசாயத்தில் சாதிக்கும் பெண்கள் கூட இருப்பதாக இதே தினமலர் செய்தி சொல்கிறதே பொதுவாக இன்றைய இளைய தலைமுறை குறிப்பாக ஆண்கள் பொறுப்பில்லாமல் மூளை சலவை செய்யப்பட்டவர்களை இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு
Rate this:
Share this comment
Cancel
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-201922:14:38 IST Report Abuse
Ravi நீங்கள் ஏன் ஐயா கவலை பட வேண்டும்.. நல்லது கெட்டது தெரியாமல்.. தலைமையின் தகுதி தெரியாமல்.. தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய இந்திய மக்கள் அனுபவிக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
30-நவ-201914:52:25 IST Report Abuse
Balaji கட்சி சார்ந்து கருத்து எழுதுபவர்கள் பொருளாதார மந்த நிலையை ஏற்க மறுக்கிறார்கள்...... நாட்டில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை..... இதையெல்லாம் குறிப்பிடுவதால் இவர்கள் உத்தமர்கள் என்பது போன்று காட்ட முற்படுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை...... இருந்தாலும் தற்போதைய நிலையை ஒப்புக்கொண்டும் ஆக வேண்டுமல்லவா பொருளாதாரத்தை நிமிர்த்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து அதற்கான வழிமுறைகளை வழங்கினால் நன்றாக இருக்கும்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X