பெண் மாஜிஸ்திரேட்டை மிரட்டிய 12 வழக்கறிஞர்கள் மீது வழக்கு | Dinamalar

பெண் மாஜிஸ்திரேட்டை மிரட்டிய 12 வழக்கறிஞர்கள் மீது வழக்கு

Added : நவ 29, 2019

திருவனந்தபுரம், : கேரளாவில், நீதிமன்ற வளாகத்தில், பெண் மாஜிஸ்திரேட்டை மிரட்டிய, 12 வழக்கறிஞர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. புகார்இங்கு, திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட்டாக பணியாற்றுபவர் தீபா மோகன். இவர், வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப் பட்டவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை, சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து, மாஜிஸ்திரேட் தீபா மோகனை, திருவனந்தபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த, 12 வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தில் வழிமறித்து மிரட்டியதாக, தீபா மோகன் புகார் அளித்தார்.இந்த சம்பவம் குறித்து, நீதித்துறை அதிகாரிகள் சங்கம் சார்பில், கேரள உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மாஜிஸ்திரேட் தீபா மோகனை மிரட்டிய, 12 வழக்கறிஞர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர். இந்தப் புகாரை, திருவனந்தபுரம் வழக்கறிஞர்கள் சங்கம், முற்றிலுமாக மறுத்துள்ளது.அழைப்புவழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்டம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு, திருவனந்தபுரம் வழக்கறிஞர்கள் சங்கம், நேற்று அழைப்பு விடுத்தது.இதனால், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள, 50 நீதிமன்றங்களின் பணிகள், நேற்று முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X