பொது செய்தி

இந்தியா

பொதுவெளியில், 'நெ.2'வா? ரேஷன் அட்டை, 'கட்'

Added : நவ 29, 2019
Advertisement

அவுரங்காபாத் : மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாதில் உள்ள கிராமத்தில், திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களின் ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய, கிராம நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத் தில், ஜரன்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு, 5,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.அனைத்து வீடுகளிலும், கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஆனாலும் பலர், திறந்தவெளிகளில் மலம் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனால், சுகாதார பாதிப்புகள் ஏற்படுகின்றன.இந்த பழக்கத்தை ஒழிக்க, கிராம நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், எதுவும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து, திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களின் ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய, கிராம சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், திறந்தவெளியில் மலம் கழிப்பவர்கள் குறித்து, கிராம சபையில் புகார் அளிப்பவர்களுக்கு, வரி சலுகைகள் அளிக்கவும், முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X