அரசு பங்களாவை காலி செய்கிறார் பட்னவிஸ்

Added : நவ 29, 2019
Share
Advertisement
மும்பை :மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர், தேவேந்திர பட்னவிஸ், மும்பையில் உள்ள, அரசு பங்களாவை காலி செய்து விட்டு, வேறு வீட்டில் குடியேறுகிறார். மலபார் ஹில் பகுதியில் உள்ள, 'வர்ஷா' பங்களாவில் இருந்து, சாமான்களை எடுக்கும் பணி துவங்கியுள்ளது.மஹாராஷ்டிராவில், 23ல், பா.ஜ., முதல்வராக, இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பட்னவிஸ், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பெரும்பான்மையை நிரூபிக்க
 அரசு பங்களாவை காலி செய்கிறார் பட்னவிஸ்

மும்பை :மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர், தேவேந்திர பட்னவிஸ், மும்பையில் உள்ள, அரசு பங்களாவை காலி செய்து விட்டு, வேறு வீட்டில் குடியேறுகிறார். மலபார் ஹில் பகுதியில் உள்ள, 'வர்ஷா' பங்களாவில் இருந்து, சாமான்களை எடுக்கும் பணி துவங்கியுள்ளது.மஹாராஷ்டிராவில், 23ல், பா.ஜ., முதல்வராக, இரண்டாம் முறையாக பொறுப்பேற்ற பட்னவிஸ், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பெரும்பான்மையை நிரூபிக்க வழியில்லாததால், நான்கு நாட்களில், பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அங்கே, முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்துஉள்ளது. நாக்பூர் தொகுதி சட்டசபை உறுப்பினரான, பட்னவிஸ், 2014ல், மஹாராஷ்டிர முதல்வராக பொறுப்பேற்றதும், குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். அவர் மனைவி அம்ருதா, ஆக்சிஸ் வங்கியில் மூத்த அதிகாரியாக உள்ளார்; மகள், மும்பையில் படிக்கிறார். பட்னவிஸ் குடும்பத்தினர், மும்பையிலேயே வசிக்க விரும்புகின்றனர். எனவே, வீடு தேடும் படலம் தீவிரமாக நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்னவிசுக்கு, 'சம்மன்'இரு கிரிமினல் வழக்கு விபரங்களை, தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்காமல் மறைத்த வழக்கில், தேவேந்திர பட்னவிசுக்கு, நாக்பூர் போலீசார், 'சம்மன்' அளித்துள்ளனர்.

நாக்பூரில், பட்னவிஸ் வீட்டில், சம்மன் வழங்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.பட்னவிஸ் மீது, 1996 மற்றும் 1998ல், ஏமாற்றுதல், மோசடி பிரிவுகளில், இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை, பட்னவிஸ், நாக்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது, தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்காமல் மறைத்ததாக, சதிஷ் உகே என்ற வழக்கறிஞர், நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது. இதைத் தொடர்ந்து, சதிஷ் உகே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரின் புகாருக்கு அடிப்படை ஆதாரமிருப்பதாக கூறி, வழக்கை விசாரிக்குமாறு, நாக்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக, பட்னவிசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே, நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்ற நாளில், பட்னவிசுக்கு சம்மன்வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X