ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் அதிகாரிகளுக்கு கிடைத்தது, 'ஜாமின்'

Added : நவ 29, 2019
Advertisement

புதுடில்லி,:ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, நிடி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குல்லர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, டில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது.ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2007ல், வெளிநாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற்றது. இதற்கு அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.


உத்தரவு



இந்த வழக்கில், சிதம்பரத்தை தவிர, நிடி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குல்லர் உட்பட பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமின் கோரி, டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி அஜய்குமார் குஹார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சிந்துஸ்ரீ குல்லர், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சிறப்பு அதிகாரி பிரதீப் குமார் பாகா, எப்.ஐ.பி.பி., எனப்படும் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரிய முன்னாள் இயக்குனர் பிரபோத் சக்சேனா ஆகியோருக்கு, இடைக்கால ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.


எப்.ஐ.பி.பி.,


இவர்களுடன், எப்.ஐ.பி.பி., மற்றும் நிதி அமைச்சகத்தில் பணி யாற்றிய அதிகாரிகள், அஜித் குமார் துங்துங், ரவீந்திர பிரசாத், அனுப் கே.புஜாரி ஆகியோருக்கும், இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் நீதிமன்றத்தில் சிதம்பரமும் இருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X