உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு: நாளை மறுநாள் விசாரணைக்கு வருமா?

Added : நவ 29, 2019
Advertisement

புதுடில்லி :'வார்டு மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்குமாறு, தலைமை நீதிபதி அமர்வில், தி.மு.க., சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கு, நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணியில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து, அரசியல் கட்சிகளும், தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தி.மு.க., சார்பில், உச்ச நீதிமன்றத்தில், நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.கோரிக்கைஅதன் விபரம்:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன், வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய, தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பணிகளை நிறைவு செய்யாமல், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது. ஏற்கனவே, வார்டு மறுவரையறை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்னும் இறுதி தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், தேர்தல் நடத்த அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.'இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், தி.மு.க., சார்பில், நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மனு தாக்கல்
இதற்கிடையே, தமிழ கத்தில் புதிதாக உதயமான ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேர், உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், நேற்று புதிதாக மனு தாக்கல் செய்தனர்.இவற்றை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை உரிய நாளில் பட்டியலிடுமாறு, பதிவாளருக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, இம்மனு, நாளை மறு நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X