முகாமில் அடைபட்டவர்களுக்கு சட்ட உதவி: காங்., கோரிக்கை

Updated : டிச 01, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (10)
Advertisement
முகாமில், அடைக்கப்பட்டவர்களுக்கு, சட்ட உதவி, அளிக்க, காங்., கோரிக்கை

புதுடில்லி, : ''அசாம் மாநிலத்தில், தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர் களுக்கு, ஜாமினில் வெளியில் வருவது உள்ளிட்ட சட்ட உதவிகளை அளிக்க, மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என, ராஜ்ய சபாவில், காங்., உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்தார்.

ராஜ்யசபாவில், நேற்று பூஜ்ய நேரத்தின் போது, காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: சமீபத்தில், வட கிழக்கு மாநிலமான அசாமுக்கு சென்றிருந்தேன். அங்கு, 998 பேர், தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுஉள்ளனர். இவர்கள், நம் நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது தொடர்பான குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு, முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள், மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என, அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், தாங்கள் இந்திய குடிமகன்கள் என்றும், அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் தங்களிடம் இல்லாததால், பல ஆண்டுகளாக முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், சிலர் கூறுகின்றனர்.

இவர்களில் பலரது நிலை மிகவும் மோசமாக உள்ளது. இவர்களுக்கு, ஜாமின் கிடைக்கவும், மற்ற சட்ட உதவிகள் கிடைக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு, நான் ஆதரவு கேட்கவில்லை. தாங்கள் இந்தியர்கள் என உரிமை கோருபவர்களுக்காகத் தான் கேட்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.ஆபாச படங்களை தடுக்ககுழு அமைக்க நடவடிக்கைராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில், ஆபாச படங்கள் இடம் பெறுவதை தடுக்க, கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இது, மிகவும் முக்கியமான பிரச்னை. இதை தடுக்க, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதை, மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன். காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், தி.மு.க.,வின் சிவா உள்ளிட்ட, எம்.பி.,க்கள் அடங்கிய குழு, இந்த பிரச்னையை தடுப்பதற்கான ஆலோசனையை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
30-நவ-201914:42:44 IST Report Abuse
Nagarajan D அப்படியே காஷ்மீரி பண்டிட் களுக்கும் சட்ட உதவி செய்விங்களாடா பாவிகளே? வாய் பேசாமல் சொந்த தேசத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் சூறையாட பட்டும் ஆயுதம் ஏந்தாமல் இருக்கும் அந்த மக்களுக்கு இந்த காந்திய தேச துரோகிகள் என்ன செய்யப்போகிறீர்கள். வோட்டு பொறுக்கி அலையும் தேச விரோத கூட்டத்திற்கு இத்தாலிய ராணிக்கு சாமரம் வீசும் நீங்கள் பாரத தேசத்தை பற்றி என்ன அக்கறை இருக்கும் கேவலமானவர்கள்
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
30-நவ-201911:37:30 IST Report Abuse
ரத்தினம் ஏற்கனவே பங்களாதேஷ் காரங்க கேரளா வரை வந்து குடியேறிட்டாங்க. சிறும்பான்மையினரின் ஓட்டுக்காக நாட்டை நாசமாக்க காங்கிரஸ் திட்டம்
Rate this:
Share this comment
Cancel
30-நவ-201909:21:19 IST Report Abuse
நக்கல் காங்கிரஸ்ஸோ அதன் கூட்டணி கட்சிகளோ சீடம்பரத்தை வெளியில் விட சொல்லி பேசமாட்டேங்குறாங்கோ... ஏன்????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X