அரசியல் செய்தி

தமிழ்நாடு

'171 பேருக்கு அரசு பணி நியமன ஆணை': முதல்வர் வழங்கினார்

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை: அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட, 171 பேருக்கு, நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.வனத் துறையில் காலியாக உள்ள, பணியிடங்களை நிரப்ப, வனச் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வழியே, 2018ல், 300 வனவர்கள், 726 வனக் காப்பாளர்கள், 61 ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர்கள், தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்பட்டனர்.மேலும், 564 வனக்காவலர், 227 வனக் காப்பாளர் பணியிடங்களை, விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழியே, வனப் பழகுனர் பணியிடங்களுக்கு, 137 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று சென்னை, தலைமை செயலகத்தில், 10 பேருக்கு, பணி ஆணைகளை வழங்கினார்.அவர்களின், 20 மாத பயிற்சி காலத்திற்கு, தொகுப்பூதியத்திற்கு பதிலாக, முறையான ஊதியம் வழங்கவும், பிற செலவினங்களுக்காகவும், 17.72 கோடி ரூபாய் அனுமதித்து, முதல்வர் உத்தரவிட்டார்.

தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனரகத்திற்கு, 32 உதவிப் பொறியாளர்கள், இரண்டு முதுநிலை வேதியியலாளர் பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், வனத் துறை அமைச்சர் சீனிவாசன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தலைமைச் செயலர் சண்முகம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X