அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சியா? 'பொய் குற்றச்சாட்டு': ஸ்டாலின்

Updated : நவ 30, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (7+ 14)
Advertisement
உள்ளாட்சி தேர்தல், முயற்சி, பொய் குற்றச்சாட்டு , ஸ்டாலின்

சென்னை: 'உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் முயற்சியில், நாங்கள் ஈடுபடுவதாக, முதல்வர் முதல், கடைக்குட்டி அமைச்சர் வரை, பொய் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை அறிவாலயத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:உள்ளாட்சி தேர்தலை, அ.தி.மு.க., அரசு, தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் நடத்தாமல், ஏதாவது சில காரணங்களை சொல்லி வருகிறது. யாராவது நீதிமன்றத்திற்கு சென்று, தடை பெறுவரா? தடை பெற்று, எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்கிற, ஒரே நோக்கத்தோடு, அ.தி.மு.க., அரசு செயல்படுகிறது.

தி.மு.க., தான், நீதிமன்றத்திற்கு சென்று, உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது என திட்டமிட்டு, முதல்வர் இ.பி.எஸ்., முதல், கடைக்குட்டி அமைச்சர் வரை, பொய் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வார்டு வரையறை பணியை, அரசு இதுவரை செய்யவில்லை; புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு, வார்டு மறுவரையறை பணிகளையும், வார்டு வரையறை பணிகளையும், இதுவரை செய்யவில்லை. பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான ஒதுக்கீட்டை, அ.தி.மு.க., அரசு, இன்னும், செய்யவில்லை.

அதேபோல, மாவட்ட ஊராட்சிக்கான ஒதுக்கீட்டையும், இதுவரை, அ.தி.மு.க., அரசு செய்ய வில்லை. மறைமுக தேர்தல் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர். இப்படி பல குழப்பங்களை செய்து, அதன் வாயிலாக, யாராவது நீதிமன்றத்திற்கு சென்று, தேர்தலை நிறுத்தி விடலாம் என்கிற எண்ணத்தில் தான், இ.பி.எஸ்., அரசு செயல்படுகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, முறைப்படுத்தி தேர்தல் நடத்த வேண்டும். ஒருவேளை முறைப் படுத்தப்படாமல், தேர்தல் நடத்துவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டால், அதையும் சந்திக்க, தி.மு.க., தயாராக உள்ளது.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.


ஐ.டி., நிறுவனங்களில்ஆட்குறைப்புக்கு எதிர்ப்பு



ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் உள்ள, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம், ஏற்கனவே ஏதாவது, ஒரு செயற்கை காரணத்தை சுட்டிக்காட்டி, ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி வருகின்றன. அடுத்த சில மாதங்களில், நாடு முழுவதும், பா.ஜ., அரசின், தவறான பொருளாதார கொள்கையால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஐ.டி., ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவும் இல்லை; கவலைப்படவும் இல்லை.

இதுபோன்ற வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சகட்டமாகத் தான், இன்ஜினியர்களும், துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர். இளைஞர்களின் வாழ்வுடன், மத்திய, மாநில அரசுகள், இதுமாதிரி ஈவு இரக்கமற்ற விளையாட்டை நடத்துவது, மிகவும் ஆபத்தானது. எனவே, வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கவும், ஐ.டி., நிறுவனங்களில் இருந்து கொத்துக் கொத்தாக, ஊழியர்கள் நீக்கப்படுவதை தடுக்கவும், மத்திய, மாநில அரசுகள், உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
01-டிச-201918:30:36 IST Report Abuse
madhavan rajan அதையெல்லாம் செய்யவில்லை என்பது எப்போது தெரிந்தது? அது முன்னரே தெரிந்திருந்தால் இவ்வளவு நாட்களில் அதை உடனே செய்யுங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும். அதுபோல இவர் பேசவில்லையே. உள்ளாட்சி தேர்தல் நடத்த ஆளும் கட்சி பயப்படுகிறது என்றுதானே கூறிவந்தார். இப்போது நடத்த முயற்சி செய்கிறோம் என்று கூறியவுடன் வேறு காரணங்களைக் கூறுகிறாரே. இது இரட்டைவேடம்தானே?
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
30-நவ-201912:33:51 IST Report Abuse
s.rajagopalan பொய் , பித்தலாட்டம் ...இவைகள்தானே உங்கள் இரு கட்சிகளுக்கும் மூலதனம் .? அரிச்சந்திரன் கூட இப்படி கோவப்படமாட்டாரு ...வர வர ரொம்ப காமெடி பண்றீங்க ....
Rate this:
Share this comment
Cancel
30-நவ-201910:36:08 IST Report Abuse
பச்சையப்பன் தீமுகாவை தோற்கடிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் முயற்சியை எங்கள் விருப்பத்திற்குரிய தள்ளபதி வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி உள்ளார். இதில் தோற்றது அடிமைகளே!! ஹா ஹா ஹாஹாஹா!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X