அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை 'முதலீடு முழுமையாக எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டு, பராமரிப்புக்காக மட்டும், 40 சதவீதம் கட்டணம் வசூலிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்திஉள்ளார். அவரது அறிக்கை:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாலாஜாபேட்டை வரையிலான பகுதி, சரியாக பராமரிக்கப்படாததற்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

'அந்தச் சாலை சீரமைக்கப்படும் வரை, 50 சதவீதம் சுங்க கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என, ஏன் ஆணையிடக் கூடாது' என கேள்வி எழுப்பிஉள்ளது.நாட்டில், அங்கீகரிக்கப்பட்ட சுரண்டல் மையங்களாக, சுங்கச்சாவடிகள் திகழ்கின்றன.

இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என, ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்பார்க்கும் வேளையில், சென்னை உயர்நீதிமன்றம், மணி கட்ட முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சரியாக பராமரிக்கப்படாத சாலைகளில், சுங்கக்கட்டணம் வசூலிக்க, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். முதலீடு முழுமையாக எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டு, பராமரிப்புக்காக மட்டும், 40 சதவீதம் கட்டணம் வசூலிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், உரிய உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X