ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட ஓட்டுப்பதிவு

Added : நவ 29, 2019
Advertisement

ராஞ்சி, :ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட ஓட்டுப்பதிவு, இன்று துவங்குகிறது.ஜார்க்கண்டில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல், இன்று துவங்கி, அடுத்த மாதம், 20 வரை, ஐந்து கட்டங்களாக நடக்கிறது.ஓட்டு எண்ணிக்கை, 23ல் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இந்நிலையில், ஆறு மாவட்டங்களில் உள்ள, 13 சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.மொத்தம், 37.83 லட்சம் வாக்காளர்கள், 3,906 ஓட்டுச் சாவடிகளில், ஓட்டளிக்கின்றனர். ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ராமசந்திர சந்திரவன்ஷி, ஜார்க்கண்ட் மாநில காங்., தலைவர் ராமேஷ்வர் ஓரான் ஆகியோர், முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவர்கள்.ஓட்டுப்பதிவு காலை, 7:00 மணிக்கு துவங்கி, 3:00 மணி வரை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X