லோக்சபாவில் பா.ஜ.,- எம்.பி., பிரக்யா மன்னிப்பு: சபையை கிடுகிடுக்க வைத்த எதிர்க்கட்சிகள்

Updated : டிச 01, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
லோக்சபா,பா.ஜ.,  எம்.பி., பிரக்யா,  மன்னிப்பு, சபை, எதிர்க்கட்சிகள்

கோட்சே குறித்த விவகாரத்தில், பா.ஜ., - எம்.பி., பிரக்யா தாக்குர் வருத்தம் தெரிவித்தபோதிலும், அதை ஏற்க மறுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக பெரும் அமளியில் இறங்கியதால், வேறு வழியின்றி அவர், லோக்சபாவில் இரண்டு முறை பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது, 'கோட்சே ஒரு தேச பக்தர்' என, பா.ஜ., - எம்.பி., பிரக்யா தாக்குர் கூறிய விவகாரம், நேற்று லோக்சபாவில் பெரிய அளவில் வெடித்தது.கேள்வி நேரம் முடிந்ததும், இந்த பிரச்னையை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கிளப்பி, அமளியில் இறங்கினர்.


வியாழனன்று லோக்சபாவில் பிரக்யா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். நாட்டுக்கு காந்தி ஆற்றிய சேவையை மதிக்கிறேன்'' என்றும் அவர் கூறினார்.

அமளி அதிகமானது

பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, சபாநாயகர் ஓம் பிர்லா, பிரக்யா தாக்குரை பேச அழைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என்னை இழிவுபடுத்தும் நோக்கில் திரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், என் பேச்சு, யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன். என்னை பயங்கரவாதி என்றெல்லாம் பேசுகின்றனர். நான் அப்படிப்பட்டவள் அல்ல. எவ்வித ஆதாரமும் இன்றி, இவ்வாறு பேசுவது தவறு.இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. மீண்டும் பெரும் அமளி வெடித்தது.மன்னிப்பு கேட்டு விட்டதாக சபாநாயகரும், அரசு தரப்பும் வாதிட, 'இல்லையில்லை. பிரக்யா நழுவுகிறார். வருத்தம் தேவையில்லை. பகிரங்க மன்னிப்பு தேவை' என, எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். அப்போது, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே, ''இதே கோட்சேவை, 'சாம்னா' பத்திரிகையில் புகழ்ந்த சிவசேனாவுடன் மட்டும், காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதே... எப்படி,'' என்றதும், அமளி அதிகமானது.

அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ''பிரக்யா, மன்னிப்பு கேட்டுவிட்டாரே... பிறகென்ன பிரச்னை,'' என்றார். அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், 'அவர் மன்னிப்பு கேட்கவில்லை; வருத்தம் தான் தெரிவித்தார்' என கூறி, 'கோட்சே ஒழிக... காந்தி வாழ்க' என, கோஷமிட்டனர்.அப்போது, சமாஜ்வாதி எம்.பி., முலாயம் சிங் யாதவை, பேச வரும்படி, சபாநாயகர் அழைத்தார். அவரோ, ''சபையில் பேசினால், இந்த பிரச்னைக்கு தீர்வு வராது.உங்கள் அறைக்கு எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து பேசுங்கள்,'' என்றார்.


உரிமை மீறல்தி.மு.க., - எம்.பி., ராஜா, ''நான் தான் கோட்சேவை குறிப்பிட்டேன். உடனே, 'அவர் தேசபக்தர்' என்றார், பிரக்யா. அதற்கு நானே சாட்சி. அவர் பேசியதை நீக்குவதாகவும் நீங்கள் கூறினீர்கள்,'' என்றார்.அதை மறுத்த சபாநாயகர், ''அவர் பேசியது, சபைக் குறிப்பிலேயே இடம்பெறவில்லை; எனவே, அதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார். அதற்கு ராஜா, ''சரி, அப்படியே இருக்கட்டும். ஆனால், பிரச்னை பெரிதாகி, ஊடகங்கள் எல்லாம் விவாதித்து, உலகத்துக்கே இது குறித்து தெரிந்து விட்டது. இப்போது பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர, ஒரே ஒரு வார்த்தை மட்டுமே தேவை. அதுதான் மன்னிப்பு,'' என்றார்.

அதற்கு, பா.ஜ., -எம்.பி., நிஷிகாந்த் துபே கூறியதாவது: பிரக்யாவை, இதே சபையின் மற்றொரு உறுப்பினரான ராகுல், பயங்கரவாதி என எப்படி கூறலாம். அதற்கு ராகுல் மன்னிப்பு கேட்பாரா? இந்த சபையின் மாண்பையும், சபையில் உள்ள உறுப்பினர்களின் கவுரவத்தையும் காப்பற்ற வேண்டிய கடமை,சபாநாயகருக்கு உள்ளது. எனவே, பிரக்யாவை, பயங்கரவாதி என கூறிய ராகுலுக்கு எதிராக, சபையில் உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்ய, சபாநாயகர் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:சபைக்கு வெளியில் ஆயிரம் நடந்திருக்கலாம். சமூக வலைதள விமர்சனம் பற்றி இங்கே பேசக் கூடாது. சபைக்குள் நடந்த விஷயத்திற்கு தீர்வு வேண்டும்; இது அரசியல் கட்சியோ, தனிநபர் சார்ந்த பிரச்னையோ அல்ல.உலகத்திற்கே சொந்தமான காந்தியை, இந்த சபை இழிவுபடுத்தியதற்கு என்ன தீர்வு என்பது தான் கேள்வி.இவ்வாறு, அவர் பேசினார்.

மூத்த எம்.பி.,க்கள் ஓவைசி, டேனிஷ் அலி, சுதிப் பண்டோபத்யாயா மஹதாப் என, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், 'இந்த பிரச்னையில், பிரக்யா மன்னிப்பு கேட்பதே சரியாக அமையும். சபையில் விவாதம் நடத்தாமல், அறைக்கு அழைத்து பேசி, தீர்வு காணுங்கள்' என்றனர்.


பிரச்னைக்கு முடிவுஇதையடுத்து, சபை ஒத்தி வைக்கப்பட்டது. உணவு இடைவேளையின் போது, சபாநாயகர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மதியத்திற்கு மேல் சபை கூடியதும், பிரக்யா பேசியதாவது:கோட்சேவை, 'தேசபக்தர்' என, நான் கூறவில்லை.

அந்தப் பெயரைக்கூட நான் உச்சரிக்க வில்லை. இருப்பினும், பிறரது மன உணர்வுகளை, ஏதேனும் ஒரு வகையில் புண்படுத்தியிருந்தால், அதற்காக, இந்த சபையில், மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியதும், பிரச்னை முடிவுக்கு வந்து, சபை அலுவல்கள் தொடர்ந்தன.


மதுரைக்கு மெட்ரோ ரயில்தமிழக அரசு கேட்கவில்லை''மதுரை- - மேலூர் - திருமங்கலம் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படுமா,'' என, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக் தாக்குர், லோக்சபாவில் கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அளித்திருந்த எழுத்துப்பூர்வமான பதிலில், ''மெட்ரோ ரயில் திட்டம் என்பது மாநில அரசுகளின் கீழ் வரும். எனவே, மாநில அரசு கோரிக்கை வைக்க வேண்டும். தமிழக அரசிடம் இருந்து அது போன்ற எந்த கோரிக்கையும் வரவில்லை என்பதால், அது போன்ற திட்டம் மத்திய அரசிடம் இல்லை,'' என, தெரிவித்திருந்தார்.


பிரக்யா பயங்கரவாதி தான்:ராகுல் மீண்டும் சர்ச்சைகாங்கிரஸ் தலைவர் ராகுல், பார்லிமென்டிற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நாதுராம் கோட்சே, வன்முறையின் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அவர் வழியை, பிரக்யாவும் பின்பற்றுகிறார். பிரக்யா, ஒரு பயங்கரவாதி என, சமூக வலைதளத்தில் நான் தெரிவித்திருந்ததை, மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதற்காக, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். இதில், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள், என்ன வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கட்டும்; அதை வரவேற்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiyagarajan - Bangalore,இந்தியா
30-நவ-201923:20:28 IST Report Abuse
Thiyagarajan கோட்ஸே இந்து தேசே பக்தர். MKG யால் தான் நாம் இந்த தீவிரவாதிகளுடன் வாழும் நிலைமை வந்துள்ளது
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
30-நவ-201919:12:40 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு முதலில் இவர் ஒரு பெண்ணா இல்லை ஆனா சந்தேகமாவே உள்ளது இவர் நடவடிக்கை
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
30-நவ-201914:06:28 IST Report Abuse
Darmavan பொய்யான சரித்திரம் சொல்லிக்கொடுத்து மாணவப்பருவத்திலிருந்து மூளைச்சலவை நடக்கிறது காங்கிரஸ் காலத்திலிருந்து.அதற்கு பிஜேபித்துணை போகிறது.மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் மக்கள் எது சரி என்பதை தீர்மானிக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X