பொது செய்தி

இந்தியா

'மாஜி' எம்.எல்.ஏ.,க்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதி

Added : நவ 29, 2019
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், வீட்டுக் காவலில் உள்ள, இரு முன்னாள் எம்.எல். ஏ.,க்கள், இதயநோய் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு, ஆக., 5ல், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. அடுத்து, அக்., 31ல், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்குவந்தன.
இதையடுத்து, அசம்பாவித நிகழ்வுகளை தடுக்க, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உட்பட, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், காஷ்மீரில் கடும் குளிர் காரணமாக, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள பலருக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.ஸ்ரீநகரின் சென்டார் ஓட்டலில், போதுமான வெப்ப வசதி இல்லாததால், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த, 37 பேர், சமீபத்தில், சட்டசபை விடுதிக்கு மாற்றப்பட்டனர். அவர்களில், தேசிய மாநாட்டு கட்சியின் பொதுத் செயலரும், முன்னாள் அமைச்சருமான, அலி முகமது சாகர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., இஷ்பக் அகமது ஆகியோருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக, 'ஸ்கிம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு, இதயநோய் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக, பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீரில், அரசியல் தலைவர்கள், 118 நாட்களுக்கு மேலாக வீட்டுக் காவலில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X