எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

எச்.ஐ.வி., பாதிப்பு குறைந்தது : அதிகாரிகள் தகவல்

Updated : நவ 30, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 எச்.ஐ.வி., பாதிப்பு, குறைந்தது , அதிகாரிகள், தகவல்

தமிழகத்தில், எய்ட்ஸ் நோய் பாதிப்பு, 0.22 சதவீதமாக குறைந்துள்ளதாக, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் இயங்கும், உலக சுகாதார அமைப்பால், 1987ம் ஆண்டு, உலக எய்ட்ஸ் தினம் உருவாக்கப்பட்டது. இந்த தினம், டிச., 1ல் கடைப்பிடிக்கப்படுகிறது. கூட்டு மருந்து சிகிச்சைஇந்நாளில், உயிர் கொல்லியான எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுத்தல், அதன் பாதிப்புகளை குறைத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்தியாவில், எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த, ஆண்டு தோறும், 4,000 கோடி ரூபாய்க்கு மேல், மத்திய அரசு செலவிடுகிறது. இதன் வாயிலாக, லாரி ஓட்டுனர்கள் உட்பட, பல்வேறு தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, கோவை, கடலுார், திருவள்ளூர், திருவண்ணா மலை உள்ளிட்ட, 22 மாவட்டங்களில், 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, மத்திய அரசு நிதியுதவியில், ஏ.ஆர்.டி., கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, நோயின் வீரியத்தை கட்டுப்படுத்துகிறது.இது குறித்து, தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். நடமாடும் வாகனங்கள் வாயிலாக, கிராமப்புற மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது. மேலும், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதேபோல, லாரி ஓட்டுனர்கள் உள்ளிட்டோருக்கு, பயன்பாட்டில் உள்ள, 50க்கும் மேற்பட்ட, 'காண்டம்' வகைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


ஆலோசனை மையம்

பால்வினை நோய் மற்றும் எச்.ஐ.வி., நோய் குறித்த சந்தேகங்களை தீர்க்க, 1800 419 1800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணு டன், ஆலோசனை மையம் செயல்படுகிறது. இதில், தினமும், 100 பேர் வரை, ஆலோசனை பெறுகின்றனர். தமிழகத்தில், கர்ப்பிணிகளிடமிருந்து, குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவுவது முற்றிலும் தடுக்கப் பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளால், தமிழகத்தில், 0.27 சதவீதமாக இருந்த எய்ட்ஸ் நோய் பாதிப்பு, தற்போது, 0.22 சதவீதமாக குறைந்து உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-நவ-201913:42:35 IST Report Abuse
ருத்ரா இதை கேட்கவே மகிழ்ச்சி. தனி மனித ஒழுக்கம் இருந்தால் இந்த விபத்து முற்றிலும் இருக்காது. எயிட்ஸால் நேரும் கொடுமை பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் தியேட்டரில் ,தொலைக்காட்சியில் விளம்பர படுத்தலாம். கொடிது கொடிது எய்ட்ஸ் கொடிது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X