பொது செய்தி

தமிழ்நாடு

பருப்பு சாகுபடி பரப்புதமிழகத்தில் அதிகரிப்பு

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை :தமிழகத்தில், பருப்பு வகைகளின் சாகுபடி பரப்பு, கணிசமாக அதிகரித்துள்ளது.நாடு முழுவதும் பருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க, மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்காக, விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்க, மாநில வேளாண்மை துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.தமிழக வேளாண் துறையினர், இதை முறையாக பயன்படுத்தினர். விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை, மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பெற்று தந்தனர். இதனால், பருப்பு வகைகள் சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த, 2018ல், தமிழகத்தில், 9.76 லட்சம் ஏக்கரில் பருப்பு வகைகள் சாகுபடி நடந்தது.

நடப்பாண்டில், சாகுபடி பரப்பு, 11.6 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. தற்போது, வடமாநிலங்களில், பருப்பு சாகுபடி குறைந்துள்ளதால், அவற்றின் விலை கிலோ, 100 ரூபாய்க்கு மேலாக உள்ளது. இதனால், தமிழகத்தில் பருப்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, அதிக வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X