பொது செய்தி

தமிழ்நாடு

அன்னூரில் புதிய தார் ரோடு: ரூ.3 கோடியில் பணி துவக்கம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் பேரூராட்சியில், மூன்று கோடி ரூபாயில், புதிய தார் ரோடு போடப்படுகிறது.அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 26 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு நகரில் பல ரோடுகள், ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளன. இதையடுத்து ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி இயக்கத்தில், இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் கோவை ரோட்டின் கிழக்கு மற்றும் தெற்கு

அன்னுார்:அன்னுார் பேரூராட்சியில், மூன்று கோடி ரூபாயில், புதிய தார் ரோடு போடப்படுகிறது.அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 26 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு நகரில் பல ரோடுகள், ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளன. இதையடுத்து ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி இயக்கத்தில், இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் கோவை ரோட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரோடு, கதர் பவன் ரோடு, தெற்கு பள்ளி ரோடு என, 1,200 மீட்டர் துாரத்திற்கு, 75 லட்சம் ரூபாயில் புதிய தார் ரோடு போடப்படுகிறது.இதே திட்டத்தில், சி.எஸ்.ஆர்.நகர் மற்றும் நாகமாபுதுாரில், 1,400 மீட்டர் துாரத்திற்கு, 1.25 கோடி ரூபாயில் ரோடு போடப்படுகிறது.மேலும் இயக்கம் மற்றும் பராமரிப்பு திட்டத்தில், ஓதிமலை ரோடு, பெரியம்மன் கோவில் ரோடு, தர்மர் கோவில் வீதியில், ஒரு கோடி ரூபாயில், புதிய தார் ரோடு போடப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X