பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு பதவிகளுக்கு போட்டி: மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை : 'இரட்டை ஓட்டுரிமை வைத்துள்ள வேட்பாளர்கள், தேர்தல் போட்டியிடா மல் தடுக்க, அரசியல் கட்சி கள் ஒத்துழைக்க வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.ஊரகம், நகர்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. நகர்புற உள்ளாட்சிகளில், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளும், ஊரக உள்ளாட்சிகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளும் உள்ளன.

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பலர், தங்களது தொழில் அல்லது அலுவல் காரணமாக, நகர்புறங்களுக்கு குடியேறியுள்ளனர். இதனால், ஊரகப் பகுதி முகவரியில், ஒரு வாக்காளர் அட்டையும், நகர்புற பகுதி முகவரியில், ஒரு அடையாள அட்டையும் வைத்துள்ளனர். இந்த இரட்டை ஓட்டுரிமையை பயன்படுத்தி, உள்ளாட்சி தேர்தலில், ஊரகப் பகுதியிலும், நகர்புற பகுதியிலும், சிலர் போட்டியிடுகின்றனர். ஊரகப் பகுதிகளில், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, கட்சி சார்பற்ற தேர்தல் நடப்பதால், யாரிடமும் அனுமதி பெற வேண்டியது இல்லை. இதனால், தேர்தலில் தேவையற்ற குழப்பம் ஏற்படுகிறது. மாநில தேர்தல் ஆணையம், 2016ல் தேர்தல் அறிவித்தபோது, இதுபோன்ற பிரச்னை அதிகளவில் எழுந்தது. குறிப்பாக, சென்னைக்கு வெளியே வசித்தவர்கள், சென்னையில் கவுன்சிலர் பதவிகளுக்கும், தங்கள் சொந்த ஊரில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் போட்டியிட்டனர்.எனவே, இம்முறை, இரட்டை ஓட்டுரிமை வைத்துள்ள வேட்பாளர்கள் போட்டியிடாமல் தடுக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள், 'யார், இரண்டு இடங்களில் போட்டியிடுகின்றனர் என்ற விபரம், தேர்தல் ஆணையத்தை விட, சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு தெரிந்து விடும். 'எனவே, அதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதற்கு, அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X