கூட்டுறவு கிடங்கில் இருப்பு குறைந்த வட்டியில் கடன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு கிடங்கில் இருப்பு குறைந்த வட்டியில் கடன்

Added : நவ 29, 2019
Share
அன்னுார்:'கூட்டுறவு சங்க கிடங்கில் இருப்பு வைத்தால் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.அன்னுார் வட்டாரத்தில், 16 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 14ல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கரியாக்கவுண்டனுார், தொடக்க வேளாண்

அன்னுார்:'கூட்டுறவு சங்க கிடங்கில் இருப்பு வைத்தால் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.அன்னுார் வட்டாரத்தில், 16 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 14ல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கரியாக்கவுண்டனுார், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரியாக்கவுண்டனுார் சங்கத்தில், விவசாயிகள் விளைபொருட்கள் இருப்பு வைக்க, கிடங்கு வசதி உள்ளது. இதில் நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இங்கு இருப்பு வைத்தால், அதற்கு ஈடாக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X