பொது செய்தி

தமிழ்நாடு

கடலில் இருந்து வெளியேறும் நுரை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை :சென்னை, சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில், கடல் அலைகளில் வெளியேறிய நுரை குறித்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஆய்வு செய்து வருகின்றனர்.சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில், நேற்று கடல் அலைகளில், நுரை அதிகமாக வெளியேறியது. தொடர்ந்து நுரை வெளியேறுவதால், கடற்கரை முழுவதும், நுரை மண்டலமாக காட்சியளிக்கிறது.

இதனால், அப்பகுதி மீனவர்கள் மற்றும் கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.ஆனால், இப்படி நடப்பது முதல்முறையல்ல; வழக்கமான ஒன்றுதான் என, அப்பகுதியினர் கூறினாலும், கடல்வாழ் உயிரினங்களுக்கு, பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக, மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.அடையாறு ஆற்றில், இவ்வளவு நாட்களாக தேங்கியிருந்த ரசாயனம் மற்றும் குடியிருப்பு கழிவுநீர், சமீபத்திய மழையால், உபரிநீருடன் அடித்துச் செல்லப்பட்டு, கடலில் கலக்கிறது. பொதுவாக, கழிவுநீர் கடலுக்குள் சென்று விடும். ஆனால், மழை காரணமாக, கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், கழிவுநீரை நுரையாக வெளியேற்றுவதாக, கடலியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடலில் நுரை வெளியேறுவது குறித்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடலில் இருந்து வெளியேறிய, நுரை மாதிரிகளை எடுத்து, ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.இது குறித்து, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் சேகர் கூறியதாவது:அடையாற்றின் முகத்துவாரம் அருகே இருப்பதால், கழிவுநீர் காரணமாக நுரை வெளியேற்றப்பட்டிருக்கலாம்.ஆனால், மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதும், ஆய்வுக்கு பின் தெரிய வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X