பொது செய்தி

தமிழ்நாடு

பழப்பண்ணையில் மங்குஸ்தான் ஏலம்: விற்பனைக்கு 60 ஆயிரம் நாற்றுகள் தயார்

Added : நவ 29, 2019
Advertisement

மேட்டுப்பாளையம்:கல்லாறு பழப்பண்ணையில் அறுவடைக்கு தயாராகவுள்ள மங்குஸ்தான் காய்கள், ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன.மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், கல்லாறில், இரண்டு மலைகளுக்கு இடையே, 25 ஏக்கர் பரப்பில், அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பண்ணை உள்ளது.
இப்பண்ணை, 1900ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு பழங்களின் ராணி என அழைக்கப்படும் மங்குஸ்தான், பலா, துரியன், லிச்சி, ரம்புட்டான், மா, கொய்யா, எலுமிச்சை ஆகிய பழ மரங்கள் உள்ளன.வாசனை திரவிய பயிர்களான கிராம்பு, ஜாதிக்காய், லவங்கப்பட்டை, மிளகு, பிரியாணி இலை மரங்கள் மற்றும் அலங்காரச் செடிகளும் உள்ளன. மேலும், இங்கு மரங்கள் மற்றும் அலங்காரச் செடிகளின் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.இங்குள்ள மங்குஸ்தான் பழ மரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை காய்கள் விடும். முதல் சீசன், ஜூன் மாதம் பூ விட்டு, செப்டம்பர் மாதம் காய்கள் அறுவடை செய்யப்படும். இந்த சீசனில் மரங்களில் காய்கள் அதிகளவில் காய்க்கும். இரண்டாவது சீசன் அக்டோபரில் பூ விட்டு, ஜனவரி மாதம் காய்கள் அறுவடை செய்யப்படும்.கல்லாறு பண்ணையில் தற்போது, 30 மங்குஸ்தான் மரங்களில் பூக்கள் விட்டு, காய்கள் காய்க்கத் துவங்கியுள்ளன.
இக்காய்களை அறுவடை செய்ய, குன்னுாரில் உள்ள அரசு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஏலம் நடந்தது. இதில், 18 வியாபாரிகள் பங்கேற்று ஏலம் கூறினர். இறுதியாக, ஒரு லட்சத்து, இரண்டாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. மேலும், பண்ணையில் மரம், மிளகு மற்றும் வாசனை செடிகளின், 60 ஆயிரம் தரமான நாற்றுகள் விற்பனைக்கு உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் நாற்றுகளை பெற்றுச் செல்லலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X