பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரையிலிருந்து அரிசிக்கு 1,055 ரேஷன் கார்டுகள்  மாற்றம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் தாலுகாவில், 1,055 சர்க்கரை ரேஷன் கார்டுகள், அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டன.தமிழகத்தில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். சர்க்கரை ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு அரசு அறிவிக்கும் பல நலத்திட்டங்கள் வழங்கப்படுவதில்லை. அரசு, சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டாக மாற்றிக் கொள்ளலாம் என, கடந்த வாரம் அறிவித்தது. இதற்கு 29ம்

அன்னுார்:அன்னுார் தாலுகாவில், 1,055 சர்க்கரை ரேஷன் கார்டுகள், அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டன.தமிழகத்தில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். சர்க்கரை ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு அரசு அறிவிக்கும் பல நலத்திட்டங்கள் வழங்கப்படுவதில்லை. அரசு, சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டாக மாற்றிக் கொள்ளலாம் என, கடந்த வாரம் அறிவித்தது. இதற்கு 29ம் தேதி கடைசி நாள் என, தெரிவித்தது.அன்னுார் தாலுகாவில், 1,788 சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில், கடைசி நாளான நேற்று, மாலை, 4:30 மணி வரை, 1,055 பேர் சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற பதிவு செய்தனர்.இதில், 154 பேர் குடிமைபொருள் அலுவலகத்திலும், மீதி, 901 பேர், தனியார் பிரவுசிங் சென்டர் அல்லது தங்கள் மொபைலில் இருந்து நேரடியாக பதிவு செய்துள்ளனர். எனினும் இது மொத்தமுள்ள கார்டுகளில், 59 சதவீதம் தான். இன்னும், 41 சதவீதம் பேர் அரிசி கார்டாக மாற்றாமல் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X