பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய அலுவலகத்தில் பார்வையாளர்களுக்கு புகைப்படத்துடன் அனுமதி சீட்டு

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை: மின் வாரிய தலைமை அலுவலகத்தில், பார்வையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. சென்னை, அண்ணா சாலையில், மின் வாரியத்திற்கு, 10 மாடி கட்டடம் உடைய, தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு, 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
மின் உபகரணங்கள் கொள்முதல், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை, ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, வாரியம் மேற்கொள்கிறது.இதனால், அந்நிறுவனங்களை சேர்ந்தவர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் என, பலர் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக, தினமும், தலைமை அலுவலகம் வந்து, அதிகாரிகளை சந்திக்கின்றனர். அவ்வாறு வருவோருக்கு, தற்போது, புகைப்படத்துடன் கூடிய, அனுமதி சீட்டு வழங்க, மின் வாரியம் முடிவு செய்தது.

சோதனை ரீதியாக துவக்கிய அந்த சேவை, முழு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இனி, அலுவலகம் வருவோர், பாதுகாப்பு ஊழியர்களை அணுகினால், அவர்கள் புகைப்படம் எடுத்து, அனுமதி சீட்டு வழங்குவர். அதில், தேதி, நேரம், சந்திக்க செல்லும் அதிகாரி உள்ளிட்ட விபரங்கள் பதிவாகின்றன. திரும்ப செல்லும் போது, அந்த சீட்டை, பாதுகாவலர்களிடம் வழங்க வேண்டும். இதனால், அலுவலகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X