பொது செய்தி

தமிழ்நாடு

பால் பாக்கெட்டில் கசிவு மாற்றி தர ஆவின் ஏற்பாடு

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை, :'ஆவின் பால் பாக்கெட்டுகளில், கசிவு ஏற்பட்டால், அதை மாற்றிக் கொள்ளலாம்' என, ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.ஆவின் பண்ணைகளில் சிறந்த முறையில், பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனினும், அவற்றை வாகனங்களில் ஏற்றி, வினியோக மையங்களில் இறக்கி வைக்கும் போது, தவிர்க்க இயலாத காரணங்களால், பால் பாக்கெட்டுகளில், சில சமயம் கசிவு ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காண, கசியும் பால் பாக்கெட்டுகளை, வாடிக்கையாளர்களிடம் திரும்பப் பெற்று, மாற்று பாக்கெட்டுகள் வழங்க, தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. ஆவின் பால் பாக்கெட்டுகளில் கசிவு இருந்தால், வாடிக்கையாளர்கள், அதை அருகில் உள்ள, ஆவின் வட்டார அலுவலகம், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகம், ஆவின் நடத்தும், 'ஹைடெக்' பாலகங்களில் கொடுத்து, மாற்றிக் கொள்ளலாம்.

கசியும் பால் பாக்கெட்டுகள், வாங்கப்பட்ட தினத்திலேயே மாற்றப்பட வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 1800 425 3300 என்ற கட்டணமில்லா, 'டெலிபோன்' எண்ணை, தொடர்பு கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X