இளைஞர் முகாம் துவக்கம்

Added : நவ 29, 2019
Advertisement

பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், மூன்று நாள் இளைஞர் முகாம் நேற்று துவங்கியது.விழாவுக்கு, வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். கலை, அறிவியல் கல்லுாரி செயலாளர் சுவாமி நிர்மலேஷானந்தர் முன்னிலை வகித்தார்.முகாமை, சிரபுஞ்சி ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் சுவாமி அனுராகானந்தர் துவக்கி வைத்தார். 'உங்கள் விதியினை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள்' என்ற தலைப்பில் பேசினார்.ஹாங்காங் யுவா யோகா கல்லுாரியின் தலைவர் யுவதயாளன், கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிதாசன், உள்ளிட்டோர் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சமூக அக்கறை கொண்ட காணொலி காட்சிகள் திரையிடப்பட்டன. முகாம் இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது.விளையாட்டு விழாகாரமடை வித்யா விகாஸ் பள்ளியில் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பிரைமரி பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு விழா நடந்தது.விழாவுக்கு வித்யா விகாஸ் பள்ளிகளின் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வரவேற்றார். நேரு யுவகேந்திரா உதவி இயக்குனர் வேல்முருகன் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.விழாவில் பள்ளி நிர்வாக அறங்காவலர்கள் ராமலிங்கம், முத்துசாமி, இயக்குனர்கள் சுரேஷ்குமார், ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X