பி.எஸ்.என்.எல்., தொலைபேசி செயலிழந்ததால் மக்கள் அவதி

Added : நவ 29, 2019
Share
Advertisement
அன்னுார்:பி.எஸ்.என்.எல்., தொலைபேசிகள், 15 நாட்களாக செயலிழந்ததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.அன்னுாருக்கு தெற்கே பொன்னே கவுண்டன் புதுார் உள்ளது. இங்கு பி.எஸ்.என்.எல்., எக்சேஞ்ச் உள்ளது. இப்பகுதி முழுக்க முழுக்க கிராமப்புறம். வேறு நிறுவனங்களின் டவர்கள் அதிகமாக இல்லை. எனவே, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் லேண்ட் லைன், மொபைல் இணைப்புகள் அதிக அளவில் இங்கு உள்ளன. 15

அன்னுார்:பி.எஸ்.என்.எல்., தொலைபேசிகள், 15 நாட்களாக செயலிழந்ததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.அன்னுாருக்கு தெற்கே பொன்னே கவுண்டன் புதுார் உள்ளது. இங்கு பி.எஸ்.என்.எல்., எக்சேஞ்ச் உள்ளது. இப்பகுதி முழுக்க முழுக்க கிராமப்புறம். வேறு நிறுவனங்களின் டவர்கள் அதிகமாக இல்லை. எனவே, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் லேண்ட் லைன், மொபைல் இணைப்புகள் அதிக அளவில் இங்கு உள்ளன. 15 நாட்களாக இங்கு பி.எஸ்.என்.எல்., வேலை செய்வதில்லை என புகார் எழுந்துள்ளது.இப்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் சுந்தரமூர்த்தி கூறுகையில், ''இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி, மின்வாரிய அலுவலகம், தனியார் தொழிற்சாலைகள், வீடுகள் என, 300 பி.எஸ்.என்.எல்., இணைப்புகள் உள்ளன. 15 நாட்களுக்கு முன் இங்கு திடீரென் பி.எஸ்.என்.எல்., தொலைபேசிகள் செயலிழந்தன. இதுவரை சரி செய்யப்படவில்லை. இது குறித்து எக்சேஞ்சில் எப்போது கேட்டாலும், விரைவில் சரி செய்து விடுவோம் என்று கூறுகின்றனர். ஆனால் சரி செய்யவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X