பொது செய்தி

தமிழ்நாடு

வேலைவாய்ப்பு திருவிழா: 71 பேருக்கு நியமன ஆணை

Added : நவ 29, 2019
Advertisement

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையத்தில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு திருவிழாவில், 71 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.கவுண்டம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வாரந்தோறும், வெள்ளிக்கிழமையில், வேலை தேடுவோர் மற்றும் வேலை அளிப்போர் சந்திக்கும், தனியார் வேலைவாய்ப்பு திருவிழா நடக்கிறது.இதில், படிக்காதவர்கள் முதல் எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர்கள், தொழிற்கல்வி பயின்றவர்கள், அக்கவுண்டன்ட் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்பவர்கள், யாருக்கும் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இம்முகாமில் வழி, வேலை வாய்ப்பு பெற்றாலும், அரசு வேலைவாய்ப்பு பதிவின் மூப்பு பாதிக்காது.நேற்று காலை நடந்த முகாமில், 22 தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வேலை தேடி, 122 பேர் வந்தனர். முதல் கட்ட நேர்காணலுக்கு பின், 71 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.திறன் பயிற்சிக்காக, 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 11 பேர் தங்கள் பெயரை பதிவு செய்தனர். மேலும், 16 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில், கோவை மண்டல வேலை வாய்ப்புத்துறை இணை இயக்குனர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X