மேட்டுப்பாளையத்தில் யானைகள் முகாம்: ஆயத்த பணிகள் தீவிரம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் யானைகள் முகாம்: ஆயத்த பணிகள் தீவிரம்

Added : நவ 29, 2019

மேட்டுப்பாளையம்;தமிழக கோவில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு, புத்துணர்வு அளிக்கும் முகாம், அடுத்த மாதம் முதல் வாரத்தில், மேட்டுப்பாளையத்தில் துவங்க உள்ளது. அதனால் முகாம் நடைபெறும் இடத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்கள், தனியார் கோவில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு, 48 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் புத்துணர்வு அளிக்கும் பயிற்சியும், சத்தான உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன.அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்கவுள்ள முகாமிற்காக, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி செல்லும் வழியில், பவானி ஆற்றின் கரையோரம், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் யானைகள் முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. முகாம் நடைபெறும் இடத்தில் உள்ள செடிகளை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.முகாமில், யானைகளுக்கு பசுந்தீவனம் வழங்குதல், முகாமை சுற்றியும் தடுப்பு வேலியும், சோலார் மின் வேலி அமைத்தல், மின் விளக்கு வசதிகள், தற்காலிக கழிப்பறை அமைத்தல், உணவுக்கூடம், பாகன்கள் இருக்க கூடாரங்கள் அமைத்தல் என, 35 பணிகளுக்கு, கடந்த, 20ம் தேதி, கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் டெண்டர் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X