பொது செய்தி

தமிழ்நாடு

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இனி நடக்காது திருட்டு!

Added : நவ 29, 2019
Advertisement
 துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இனி நடக்காது திருட்டு!

பெ.நா.பாளையம்:துடியலுார் வட்டாரத்தில், தொடர்ந்து நடக்கும் திருட்டுகளை கட்டுப்படுத்த, போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.துடியலுார் அருகே வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள குடியிருப்பில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், 135 சவரன் நகை, ரொக்கம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயின.
இத்திருட்டில் ஈடுபட்டவர்களையே கண்டுபிடிக்காத சூழலில், கடந்த வாரம் தடாகம் ரோடு, அப்பாஸ் கார்டனில் உள்ள ஒரு வீட்டில், 167 சவரன் நகை, 15 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயின.இதனால், ஆடிப்போன துடியலுார் போலீசார், இனி திருட்டுகள் நடக்காமல் தடுக்க என்ன வழி என்பது குறித்து, தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது நடந்துள்ள இரு திருட்டுகளும், ஆட்கள் வீட்டில் இல்லாததை உறுதி செய்தபின் நடந்துள்ளன. எனவே, ஆட்கள் இல்லாத வீடுகளில் திருட்டு நடக்காமல் இருக்க, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நோட்டீஸ் அச்சடித்து, அனைவருக்கும் கொடுத்து வருகின்றனர். மேலும், ஒலிபெருக்கிகள் கொண்டு பிரசாரமும் செய்து வருகின்றனர்.அதில், குடியிருப்பில் அனைத்து இடங்களிலும், 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும். வேலைக்காரர்களின் விபரம் மற்றும் புகைப்படத்தை சேகரித்து வைக்க வேண்டும். காஸ் சிலிண்டர், தண்ணீர் கேன், செய்தித்தாள் இவற்றை கொண்டு வரும் நபர்கள் மீது, சரியான கவனம் செலுத்துதல் வேண்டும்.'வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் செல்ல நேர்ந்தால், பக்கத்து வீட்டார் மற்றும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட 25 தகவல்கள் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளன.'வாட்ஸ் ஆப் குரூப்'திருட்டுகள் பெரும்பாலும், நகையை மையமாக வைத்து நடக்கிறது. இதனால், துடியலுார், தடாகம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், நகை அடமான கடைகள் உள்ளிட்ட நகைகள் அதிகமாக புழங்கும் நிறுவன உரிமையாளர்களை போலீசார் அழைத்து, கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.மேலும், துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் என்ற 'வாட்ஸ் ஆப் குரூப்' துவக்கப்பட்டுள்ளது. அதில், பகல் மற்றும் இரவு நேரத்தில் ரோந்து பணிக்கும் செல்லும் போலீசார், குறிப்பிட்ட வீடு, நிறுவனங்கள் முன், அங்குள்ள வாட்ச்மேனுடன் இணைந்து படம் எடுத்து அதில் பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, அனைத்து போலீசாரும் சரியாக பணியாற்றுகின்றனரா என, கண்காணிக்க, போலீஸ் ஸ்டேஷனில், இதற்காக ஒரு போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வாகன சோதனைஇது தவிர, துடியலுார், கவுண்டம்பாளையம், லுானா நகர், நல்லாம்பாளையம் பெட்ரோல் பங்க், மஞ்சீஸ்வரி நகர் சந்திப்பு, ராக்கிபாளையம் சந்திப்பு, கே.என்.ஜி., புதுார் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட, ஏழு இடங்களில் தடுப்பு அமைத்து, வாகனங்கள் சோதனை நடக்கிறது.இரவு, 1:00 மணிக்கு துவங்கும் வாகன சோதனை காலை, 6:00 மணி வரை நடக்கிறது. இது தவிர, 15 இடங்களில், 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X