பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வரத்தின்றி வறண்ட தடுப்பணைகள்: 'ஜல்சக்தி அபியான்' அதிகாரிகள் அதிர்ச்சி

Added : நவ 29, 2019
Advertisement

அன்னுார்:நீர் நிலைகளை முறையாக பராமரித்தல், நிலத்தடி நீரை சேமித்தல், மழை நீர் சேமித்தல் ஆகியவற்றுக்காக, மத்திய அரசு, 'ஜல்சக்தி அபியான்' என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இந்த திட்டத்தில் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு பல வழிகாட்டுதல்கள் செய்யப்படுகின்றன.அந்த வழிகாட்டுதல்படி செயல்படுகின்றனவா என, மத்திய அரசின் மீன்வளத்துறை துணை செயலாளர் சர்பேஸ்வர் மஸ்ஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு கோவை மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகிறது. நேற்று அந்த குழு, சர்பேஸ்வர் மஸ்ஜி தலைமையில், மூன்றாவது முறையாக அன்னுார் ஒன்றியம் வந்தது. அன்னுார், மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள, 119 ஏக்கர் குளத்தை பார்வையிட்டனர். அன்னுார் பகுதியில் ஓரளவு மழை பெய்திருந்தும், குளத்தில் ஒரு சொட்டு நீர் கூட இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆம்போதி ஊராட்சியில், ஊரக வேலை உறுதி திட்டத்தில், நாச்சிபாளையத்தில் மூன்று இடங்கள், ஆம்போதியில், இரண்டு இடங்கள், வடுகபாளையத்தில் ஒரு இடத்தில் தலா, ஏழு லட்சம் ரூபாய் வீதம், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளை பார்வையிட்ட சர்பேஸ்வர் குழு அதிர்ச்சிக்குள்ளாகியது. அங்கும் ஒரு சொட்டு நீர் கூட இல்லை. ''தடுப்பணைகளுக்கு மழை நீர் வரும் பாதையில் புதர்கள், மண்மேடுகளை அகற்ற வேண்டும். தடுப்பணையில் மழைநீர் தேங்கும் குழிகள் அமைக்க வேண்டும்'' என, அவர் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X