பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் கலைத் திருவிழா

Added : நவ 29, 2019
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு கிட்ஸ் பார்க் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா நடந்தது.கோவை முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார்.பேரூர் கல்வி மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் சுப்புலட்சுமி, பள்ளி தாளாளர் லட்சுமணசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், கதை கூறுதல், வரைந்து வண்ணம் தீட்டுதல், களிமண் பொம்மைகள் செய்தல், ஒப்புவித்தல் மழலையர் பாடல், பரத நாட்டியம், அழகு கையெழுத்து, திருக்குறள் ஒப்புவித்தல், குழு நடனம், ஒப்பணை அறை, வண்ணம் தீட்டுதல், ஒரு நபர் நாடகம், கட்டுரை போட்டி, பேச்சு போட்டி போன்ற போட்டிகள் நடந்தது.ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.விழாவில், சிறுக்களந்தை விக்னேஷ்வர்வித்தியா மந்திர் பள்ளி முதல்வர் வெங்கடாசலம், கிணத்துக்கடவு ஒன்றிய, தொடக்க, நடுநிலைப்பள்ளி மற்றும் நர்சரி, மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்றனர்.விழாவில், பள்ளி முதல்வர் ராமு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X