ரோட்டை புறக்கணிக்கும் மர்மம் என்ன? வடக்கு ஒன்றிய மக்கள் ஆவேசம்

Added : நவ 29, 2019
Advertisement

பொள்ளாச்சிபொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தும் முக்கிய ரோட்டை அதிகாரிகள் சீரமைக்க மறுப்பதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.பொள்ளாச்சி ஆர்.பொன்னாபுரம் - டி.நல்லிக்கவுண்டன்பாளையம் இணைப்பு ரோடு, வடக்கு ஒன்றிய நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ளது.
செல்லாண்டி கவுண்டன்புதுார், தேவம்பாடிவலசு, காளிபாளையம், நல்லிக்கவுண்டன்பாளையம், களத்துப்புதுார் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தும் ரோடு, சுமார் ஒரு கி.மீ., தொலைவுக்கு படு மோசமாக உருக்குலைந்துள்ளது.ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்நிலை நீடித்தும், ஒன்றிய அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கடந்த மழைக்கு ரோடு நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு சிதைந்தது. வாகன போக்குவரத்தே இல்லாத ரோடுகளை புதிதாக அமைக்கும் அதிகாரிகள், இந்த ரோட்டை புறக்கணிப்பதற்கான காரணம் தெரியவில்லை.ஒரு ரோடு புதிதாக போட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மறுபடியும் ரோடு போட முடியாது. ஒன்றியத்தில் நிதி இல்லை என, பலவித காரணங்களை அதிகாரிகள் கூறுகின்றனர்.சில நாட்களுக்கு முன், ரோட்டில் உள்ள பள்ளங்களுக்கு கல்லும், மண்ணும் கொட்டி சீரமைக்கப்பட்டது; முறையான 'பேட்ச் ஒர்க்' செய்யக்கூட ஒன்றிய நிர்வாகத்துக்கு மனம் இல்லை. ரோடு அமைத்த ஒப்பந்ததாரர் ஐந்தாண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட ரோட்டை மட்டும் புறக்கணிப்பதற்கு எதாவது அரசியல் காரணங்கள் உள்ளதா என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.உள்ளட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஒன்றிய அதிகாரிகளின் இது போன்ற நடவடிக்கை, தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X