பொது செய்தி

தமிழ்நாடு

குடிநோயில் இருந்து மீள்வதற்கு குடும்ப ஒத்துழைப்பு அவசியம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
பொள்ளாச்சி:'குடும்பத்தார் ஒத்துழைப்பு இருந்தால் குடிநோயில் இருந்து மீளலாம்,' என, ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பின் விழாவில் தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்திலும், 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' அமைப்பின் கிளைகள் செயல்படுகின்றன. பொள்ளாச்சியில் செயல்படும் 'பொள்ளாச்சி நம்பிக்கை' குழுவின் முதலாம் ஆண்டு விழா, ரங்சமுத்தரத்தில் உள்ள திருமண

பொள்ளாச்சி:'குடும்பத்தார் ஒத்துழைப்பு இருந்தால் குடிநோயில் இருந்து மீளலாம்,' என, ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பின் விழாவில் தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்திலும், 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' அமைப்பின் கிளைகள் செயல்படுகின்றன. பொள்ளாச்சியில் செயல்படும் 'பொள்ளாச்சி நம்பிக்கை' குழுவின் முதலாம் ஆண்டு விழா, ரங்சமுத்தரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், சென்னை, பெங்களூரு,ஊட்டி, கூடலுார், கேரளாவை சேர்ந்த, முன்னாள், இந்நாள் குடிநோயாளிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், குடிநோயால் ஏற்பட்ட இழப்புகள், உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள், குடிநோயில் இருந்து மீண்ட அனுபவம், அதற்கு ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு உதவிய விதம் குறித்து பகிர்ந்து கொண்டனர்.குடிநோயில் இருந்து மீள, குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மிக அவசியம். எனவே, குடும்பத்தாருக்கும் கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது என, தெரிவித்தனர்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் கிருத்திகா பேசியவாவது: மதுவில் உள்ள ரசாயனங்களால் மூளை, நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் ஏற்படுகிறது. குடிப்பது என்பது பல் துலக்குவது, குளிப்பது போன்ற வழக்கமான செயலாக மூளையில் பதிந்து விடுகிறது.இதனால், குடியில் இருந்த மீள முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. உரிய மனநல சிகிச்சை, மருத்துவ உதவி, குடும்பத்தார் ஒத்துழைப்பு இருந்தால் குடிநோயில் இருந்து மீள நிச்சயம் உதவும்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குடிநோயாளிகளுக்கு மனநல மற்றும் மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு, பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X