பொது செய்தி

தமிழ்நாடு

மாங்கன்றுகள் நடவு செய்ய மானியம் ஒதுக்கீடு

Added : நவ 29, 2019
Advertisement

உடுமலை:அடர் நடவு முறையில், மா மரக்கன்றுகள் நடவு செய்ய, மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விளைநிலங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உடுமலை மானுப்பட்டி, சின்னகுமாரபாளையம், கொங்குரார் குட்டை உட்பட மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பல ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாமரங்கள் நடவு மற்றும் பராமரிப்பில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் தோட்டக்கலைத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், சில திட்டங்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் மானியமும் வழங்கப்படுகிறது.அவ்வகையில், அடர் மா நடவு தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.சாதாரண நடவு முறையில், மரக்கன்றுகளுக்கு இடையே 10 மீ., இடைவெளி விட்டு நடவு செய்து, எக்டருக்கு, 100 மரக்கன்றுகளை பராமரிக்கின்றனர். ஆனால், அடர் நடவு முறையில், 5 மீ., இடைவெளியில், 400 மரக்கன்றுகளை நட்டு, நீர் சிக்கனத்துக்கு, நுண்ணீர் பாசனம் அமைத்து, பராமரிக்க தோட்டக்கலைத்துறை அறிவுறுத்துகிறது. இதனால், கூடுதல் வருவாய் உட்பட பல்வேறு பலன்கள் கிடைப்பதாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், பிரதம மந்திரியின் சிறப்பு திட்டத்தில், 3,550 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க, ரூ.2188.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதே போல், அடர் மா நடவு செய்ய, 50 எக்டருக்கு, ரூ. 4.920 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.உடுமலை வட்டாரத்தில், இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் தேர்வு முடிந்து பணிகள் துவங்கியுள்ளது. மேலும், சின்னகுமாரபாளையம் பகுதியில், அடர் நடவு முறையில், மா மரங்கள் நடவு மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தனர்.இதே போல், 1,870 எக்டரில், சொட்டுநீர் பாசன கருவிகள் அமைக்க, ரூ.1,146 லட்சம் மானியம் ஒதுக்கப்பட்டு விவசாயிகளுக்கு பணியானை வழங்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X