பொது செய்தி

தமிழ்நாடு

தூணக்கடவு - சர்க்கார்பதி நீர்வழிப்பாதையில் மின்மயமாகும் மதகு!

Added : நவ 29, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே துாணக்கடவில் இருந்து சர்க்கார்பதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் முகப்பு (நாலாயிரம் கேட்) பகுதியில் உள்ள மதகு மின்மயமாக மாற்றும் பணி விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பி.ஏ.பி., திட்டத்தில், மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு அணை நீர், பரம்பிக்குளம் அணைக்கு கொண்டு வரப்படுகிறது.
அதன்பின், துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய சமமட்ட நீர்தேக்கத்தில் இருந்து, சர்க்கார்பதி நீர் மின்உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி, பீடர் கால்வாய் வழியாக ஆழியாறு அணைக்கு தண்ணீர் செல்கிறது.இதில், துாணக்கடவு அணையில் இருந்து வரும் நீர், நாலாயிரம் கேட் எனப்படும் நுழைவுவாயில்வழியாக, சர்க்கார்பதிக்கு வருகிறது.துாணக்கடவு அணையிலிருந்து வரும் நீர் மட்டுமின்றி, கோழிகமுத்தியிலிருந்து வரும் நீரும் இந்த கால்வாயில்சங்கமிக்கிறது.காட்டாற்று வெள்ளமும், அணையிலிருந்து வரும் நீரும் சங்கமிப்பதால், மரக்கட்டைகள் மற்றும் கழிவுகள் அடித்து வரப்பட்டால் தடுக்கும் வகையில், இரும்பு கம்பிகளை கொண்டு சல்லடைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் குடிக்க வரும் போது, எதிர்பாரதவிதமாக தவறி விழுந்தால், நீரில் அடித்து வராமல் தடுக்கப்படுகிறது.துாணக்கடவு, நாலாயிரம் கேட் முகப்பு பகுதியில் உள்ள ஷட்டர், ஊழியர்கள் மூலம் சங்கிலியை சுற்றி அடைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.சர்க்கார்பதியில் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது, தண்ணீர் நிறுத்தம் செய்ய வேண்டுமானால், நான்கு அல்லது ஐந்து மணி நேரம் ஆகிறது.இதற்கு மாற்றாக, இந்த ஷட்டரை மின்மயமாக மாற்ற வேண்டும். பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'துாணக்கடவு நாலாயிரம் கேட் பகுதியில், குப்பை தடுப்பான், கால்வாய் ஷட்டர் மின்வசதி ஏற்படுத்துதல் மற்றும் பரம்பிக்குளம் கால்வாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, மொத்தம், 5.2 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.இதற்கான அரசாணை எதிர்பார்த்துள்ளோம். அரசாணை வந்ததும், டெண்டர் விடப்பட்டு பணி விரைவில் துவங்கப்படும். ஷட்டர் மின்மயமாக்கினால், பணிகள் எளிதாகும்; ஆட்கள் வேலைப்பளு குறையும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X