பொது செய்தி

தமிழ்நாடு

பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

Added : நவ 29, 2019
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட, 15 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், உடற்பயிற்சி கூடம் அமைக்கவில்லை.இதனால், பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய முடியாமல், அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடை பயிற்சி மட்டுமே செய்கின்றனர்.பேரூராட்சிக்கு, பல்வேறு வீட்டுமனை பிரிப்புகளில் இருந்து பூங்கா மற்றும் பொது உபயோகத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தான செட்டில்மென்ட் பத்திரம் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில், ஏதாவது ஒரு இடத்தையாவது தேர்வு செய்து உடற்பயிற்சி கூடம் அமைத்திருக்கலாம். ஆனால், இடம் இருந்தும் உடற்பயிற்சி கூடம் அமைக்காமல் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது.கிணத்துக்கடவில் இருந்து, கொண்டம்பட்டி நான்கு கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு, 30 லட்சம் ரூபாய் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், அதிகளவில் மக்கள் வசிக்கும் பகுதியாகவும், தாலுகா அந்தஸ்து பெற்றுள்ள நிலையிலும், கிணத்துக்கடவில் உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்கா அமைக்காமல் இருப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X