ஆனைமலை:ஆனைமலை அடுத்த மயிலாடுதுறையில், கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது.ஆனைமலை அடுத்த மயிலாடுதுறையில், ஆழியாறு ஆற்றில் இருந்து வேட்டைக்காரன்புதுார் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு, குடிநீர் பெறப்படுகிறது. இத்திட்டம் மூலம், 24 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கோட்டூர் பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், மயிலாடுதுறை நீரேற்று நிலையம் அருகே, கோட்டூருக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான குழாய், இரண்டு வாரங்களுக்கு முன் உடைந்தது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் குழாயை சரிசெய்தனர்.ஆனால், ஊற்று நீரின் காரணமாக மீண்டும் குழாய் உடைந்து கொண்டே இருந்ததால், பத்து நாட்களுக்கும் மேலாக மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.குடிநீருக்காக மக்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பேரூராட்சியினர், நான்கு டிராக்டர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.இந்நிலையில், குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி நிறைவடைந்தது. இனியாவது தாமதமின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிநீர் வடிகால் வாரிய உதவிப்பொறியாளர் சிவக்குமார் கூறுகையில், ''குழாய் உடைந்த இடத்தில், நீர் ஊற்று இருந்ததால், சரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஊற்று நீரினால், மூன்று முறை குழாய் உடைந்தது. தற்போது, குழாய் உடைப்பு முழுமையாக சரிசெய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE