கிணத்துக்கடவு:நெகமம் அருகேயுள்ள பனப்பட்டி சர்வசக்தி விநாயகர் கோவிலில், வரும் டிச., முதல் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.பனப்பட்டி கிராமத்தில், சர்வசக்தி விநாயகர் கோவில் உள்ளது. கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிேஷக விழா நடக்கிறது.அரசமரத்தடி செல்வ விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி, தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, திருவிளக்கு வழிபாடு, புனித நீர், விநாயகர் வழிபாடு, காப்பு அணிவித்தல், திருவருள் சக்திகளை திருக்குடங்களில் எழுந்தருளச் செய்தல் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது.இன்று, 30ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 6:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, திருமஞ்சன ஆகுதி, 108 திரவியாகுதி, அர்ச்சனை வழிபாடு நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு எண் வகை மருந்து சாத்தி, சுவாமிகளை பீடத்தில் வைத்தல், மூலவருக்கு வெள்ளி பந்தனம் சாத்துதல் நடக்கிறது.டிச. 1ம் தேதி காலை, 4:30 மணிக்கு மங்கள இசை, திருபள்ளி எழுச்சி, காப்பு அணிவித்தல், திருக்குடங்கள் கோவிலை சுற்றி வருதலும், 7:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தி வைக்கின்றனர். அதன்பின், மூலவருக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE